தமிழில் இமெயில் முகவரிகள்

SOCIAL SHARE
Pin It

தற்போது நாமெல்லோரும் ஆங்கிலமொழி யில் மட்டுமே நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி வருகின்றோம்.அதற்கு பதிலாக தமிழ் மொழியிலும் நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி பயன்படுத்திகொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அனுமதி அளிக்கின்றது.


இந்த புதிய வசதியை மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் ஆஃபிஸ்365, அவுட்லுக்2016 போன்ற பயன்பாடுகளும் ஆதரிக்கின்றன.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்ஆகியவற்றில் செயல்படும் அவுட்லுக் பயன்பாடுகளிலும் இந்த வசதி செயல்படுமாறு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில்பயன்படுத்திடும் மின்னஞ்சல் முகவரிகளை உலகமயமாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி அமைவும் (Email Address Internationalisation (EAI)) ஆதரிக்குமாறு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான தமிழ் மொழியில் உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளானது உலகளாவிய செந்தர குறிமுறை-வரிகளான ஒருங்கு குறியீடுகளில் (Unicode) அமைந்திருக்க வேண்டும் என்பதே அடிப்படை நிபந்தனையாகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனமானது வருங்காலத்தில் தாங்ள் உருவாக்கப்போகும் அனைத்து மென்பொருட்களையும் இந்த தமிழ் மொழியின் மின்னஞ்சல் முகவரிகளை ஆதரிக்கூடியதாகவே மேம்படுத்தப்பட்டு வெளியிட படவுள்ளன என்ற செய்தியையும் மனதில் கொள்க.

வாருங்கள் இனி நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை தமிழிலேயேஉருவாக்கி பகிர்ந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்

Karisalmedia Admin