நல்ல கடவுச்சொற்களை கட்டமைப்பது என்பதுதான் நம்மெல்லோருக்கும் மிகச்-சிரமமானதும் மிகச்சிக்கலானதுமான பணியாகும்.
ஏனெனில் நாம் உருவாக்கிடும் கடவுச்சொற்கள் எளிதில் நினைவுக் கூறதக்கதாகவும் இருக்கவேண்டும் குறிப்பிட்ட குறியீடுகளெல்லாம் கலந்ததாக இருக்கவேண்டும்.
நம்மைத் தவிர மற்ற யாராலும் எளிதாக யூகித்து அபகரிக்க முடியாததாகவும் இருக்கவேண்டும் என்பன போன்ற கட்டுபாடுகளுடன் உருவாக்கிட வேண்டியுள்ளது.
தற்போது ஏறத்தாழ 500 மில்லியன் கடவுச்சொற்கள் நம்மனைவராலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன அவைகளுடன் ஒப்பிடபட்டு எளிதில் உடைத்தெறிய முடியாதவாறான கடவுச்சொற்களாக நாம் நம்முடைய கடவுச்சொற்களை கட்டமைக்க வேண்டியுள்ளதால் இவ்வாறான கடவுச்சொற்களை கையாளுவதற்கென்றே ஏராளமான பயன்பாடுகள் தற்போகு புழக்கத்தில் உள்ளன.
அவைகளுள் 1 Password எனும் பயன்-பாடானது நாம் உருவாக்கவிருக்கும் கடவுச்சொற்களை பட்டியலாக உள்ள Pwned Password உடன் ஒப்பிட்டு சரிபார்த்து எந்த கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்கும்என பரிந்துரைக்கின்றது.
இந்த 1 Password எனும் பயன்பாட்டில் நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவக்கி அதில் ஒரு கடவுச்சொற்களை தெரிவுசெய்து கொண்டு Shift+Ctrl+Alt+C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அதனை தொடர்ந்து
Check Password எனும் பொத்தானை அழுத்துக.
அதன்பின்னர் நாம் கட்டமைத்த குறிப்பிட்ட கடவுச்சொற்கள் பாதுகாப்பானது-தான் என திரையில் அறிவித்தால் அதனை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க













