மேககணினி சேவை என்பது பல்வேறு புதிய கருத்தாக்கங்களை சொல்லாக்கங்களை கொண்டுவந்தாலும் நவீண கணினிகளின் உள்கட்டமைப்பு சேவை.
தளசேவை:
(platform-as-a-service(PaaS)), மென்பொருள் சேவை (software-as-a-service (SaaS)) ஆகிய எதனையும் இந்த மேககணினி சேவையின் வாயிலாக கொண்டு வரமுடியவில்லை என்பதே எதார்த்தமான உண்மை நிலையாகும் அவைகளை பற்றிய பறவை பார்வை பின்வருமாறு:
உள்கட்டமைப்பு சேவை:
(software-as-a-service (SaaS)) மேலேகூறிய மூன்று சேவைகளில் இதுமிக எளியதானதாகவும் அடிப்படையானதாகவும் விளங்குகின்றது தகவல் தொழில்-நுட்பத்துறையின் தேக்கிவைத்தல், கணக்கிடுதல், வலைைபின்னலை செல்படுத்துதல் ஆகிய செயல்களை ஒருங்கிணைத்து மூன்றாவது நபர் நமக்காக நாம் பயன்படுத்திய அளவிற்குமட்டுமான சேவைக்கட்டணத்துடன் இந்த சேவை வழங்கபடுகின்றது.
மென்பொருட்களை நம்முடைய உடைமையாக்குவதற்கான அனுமதி அல்லது சேவையாளர்கணினி போன்றவை நம்முடைய சொத்துகளாக இல்லாமலேயே நாம் நம்முடைய தேவைக்கேற்ப இந்த வளங்களைபயன்படுத்திய அளவிற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்என்ற நெகிழ்வுதன்மையுடன் கூடிய கட்டணத்தில் இந்த IaaS எனும் சேவையானது அதனை விரும்புவோர்களுக்கு மட்டும் எளிதாக கிடைக்கின்றது.
இந்த சேவையின் சந்தைமதிப்பு 2016 இல் 25பில்லியன் டாலர்களாக இருந்தது தற்போது 2018 இல் 45 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது இவற்றுள் கூகுள் , மைக்ரோசாப்ட், ஐபிஎம் ஆகியனசேர்ந்து சுமார் 23 சதவிகிதம் சந்தையை தக்கவைத்து கொண்டுள்ளன.
தளசேவை (platform-as-a-service(PaaS)) :இது அதற்கடுத்தபடிநிலை சேவையாகும் வாடிக்கையாளர் விரும்பும் பணிக்கான பயன்பாடுகளைபாதுகாப்பாகவும் தேவைகேற்ப மேம்படுத்தியும் தருகின்ற கருவிகளையும் ,திறனையும் இந்த சேவை உறுதிபடுத்திடு-கின்றது.
வாடிக்கையாளர் ஒருவரிடம் கணினியின்உள்கட்டமைவு வசதி இல்லை-யென்றாலும் அவ்வாடிக்கையாளர் விரும்பும் எந்தவொன்றையும் பயன்பாடாக கட்டமைத்து வழங்குகின் ற இடைநிலைசேவையாக தரவுதளத்தினை நிருவகித்தல், ஆய்வுசெய்தல் அல்லது இயக்கமுறைமை தளமாக செயல்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையை வழங்குவதே இந்த தளசேவையாகும்.
Google App Engine, Oracle Cloud Platform, Pivotal’s Cloud Foundry ஆகியன இந்த சேவைகளை வழங்கும் முன்னனி நிறுவனங்களாகும்.
Oracle ,AWS ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களுடைய சொந்த IaaS எனும் அடிப்படை சேவையின் மீது இந்த PaaS எனும் இடைநிலை சேவையை வழங்குகின்றன மற்றவை வேறுநிறுவனங்களின் IaaS எனும் அடிப்படை சேவையின் மீது தங்களின் PaaS எனும் இடைநிலை சேவையை வழங்குகின்றன.
மென்பொருள் சேவை:
(software-as-a-service(SaaS)): நாம் விரும்பும் செயலை செயல்-படுத்திடுவதற்கான நிரல்தொடர்களை இணையத்தின் வாயிலாக நாம் மூன்றாவது நபர்களிடமிருந்து பெறுவதே இந்த மூன்றாவது மேலேடுக்கு சேவையாகும்.
இது நாம் வழக்கமாக குறிப்பிட்ட கட்டணத்துடன் கொள்முதல்செய்து அதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்திடுவது என்பதைவிட வேறுபட்டநிலையாகும் அதாவது ஜிமெயில,கூகுள்டாக்ஸ்,ட்ராப்பாக்ஸ் போன்றவைகளை நமக்கேற்றவாறு பயன்படுத்தி கொள்வதற்கு இணையத்தின் அடிப்படையிலான அலுவலக பயன்பாடு (web-based Office 365), வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை(CRM), மனித வள நிருவாகம் (HR) போன்றவைகளுக்கான பயன்பாட்டு மென்பொருட்களை இவைகளில் பயன்படுத்தி கொள்வது இந்தவகைசேவையை சேர்ந்ததாகும்.













