வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்!

SOCIAL SHARE
Pin It

1. இயந்திர கற்றல் (Machine Learning) என்பது கைவசமுள்ள தரவுகளை கொண்டு அடுத்து என்ன நடைபெறும் என முன்கணிப்பு செய்திடும் தொழில் நுட்பமாகும் அதிலும் திறமூல மென்பொருட்களாக Google Cloud Machine Learning Engine, Apache prediction IO,Amazon Machine Learning Microsoft Distributed Machine Learning Toolkit, Unity Machine Learning Agentsபோன்றவைமிக முக்கிய பங்கு வகிக்கின்றன

2. அடுத்ததாக மெய்நிகர் பணப்பரிமாற்றத்தில் பிளாக்செயின் பிட்காயின் தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகின்றந இந்த பிளாக்செயினின் திறமூல மென்பொருளாக ERIS, Hydrachain, Multichain,OpenChain,Hyperledger ஆகியவை விளங்குகின்றன.

3. மூன்றாவதாக ஸி எனும் கணினிமொழி இது இயந்திரகற்றலை ஆதரிக்கின்றது அதுமட்டுமல்லாது கோட்டு மாதிரி, கோடற்ற மாதிரி, வித்தியாசமான புள்ளியியல் பரிசோதனை, மேம்பட்ட வரைகலைதொழில்நுட்பம், அணி கணக்கிடுதல், தரவுகளின் ஆய்வு கருவிகள் எனஎண்ணற்ற ஏறத்தாழ 11000 பொதிகளை நம்முடைய பயன்பாட்டிற்காக இதுதன்னகத்தே வைத்துள்ளது.

4. நான்காவதாக திறமூல பொருட்களுக்கான இணையம் (IoT) நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களை இணையத்தின் வாயிலாக கையாளுவதற்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவுகின்றதுஇந்த வகையில் திறமூலமென்பொருட்களாக Kaa IoT, SiteWhere,ThingSpeak,DeviceHive,Thinger.ioஆகியன உள்ளன.

5. ஐந்தாவதாக Progressive WebApps (PWAs)
எனும் முற்போக்கு இணைய பயன்பாடுகளின் உதவியால் கைபேசிகளில் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்திடாமலேயே செயல்படுத்தி பயன்பெறும் வசதியை பயனாளர்களுக்கு வழங்குகின்றது இவ்வாறான பயன்பாடுகள் ஜாவாஸ்கிரப்ட், சிஎஸ்எஸ், ஹெச்டிஎம்எல் ஆகிய மொழிகளில் உருவாக்கபெறுகின்றன.இவை பெரும்பாலான இணையஉலாவிகளிலும் சாதனங்களிலும் அனைத்து திரைகளுக்கு பொருத்தமாகவும் அமைந்து இணைய இணைப்பு இல்லையென்றாலும் செயல்படுகின்றன இவைகளை உருவாக்குவதற்கான கருவிகள் React, Polymer Template, Lighthoî‡e, Webpack ஆகியவையாகும்.

6. ஆறாவதாக சொந்த சேவையாளர் கணினி வசதி இல்லாதவர்கள் கூட சேவையாளர் வசதியை Platform a‡ a Service(PaaS) எனும் சேவையை வழங்கிடும் மேககணினி எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இதற்கான கருவிகள் OpeStack, CloîdStack,Open‡hift,iCanCloîd,GreenCloîd போன்றவையாகும்.

7. ஏழாவதாக உடல்நலபயன்பாடுகள் , நாடுகளின் பாதுகாப்பு படை, நவநாகரிக பயன்பாடு, விளையாட்டுகள், கட்டுமானங்கள் ,தொலைதொடர்பு, பல்லூடகம் போன்றவைகளின் கணினி பயன்பாடுகளை உருவாக்கி அவற்றை செயல்படுத்தி சரிபார்ப்பதற்கு மெய்நிகர் பரிசோதனை (Virtîal Relaity Te‡t) தொழில்நுட்பம் மிகமுக்கியஇடத்தை வகிக்கின்றது OpenMa‡k, HighFidelty, OpenSpace3D, ARToolkit போன்றவை இந்த Ope‡oîrce Virtîl Reality(OSVR) கருவிகளாக விளங்குகின்றன

Karisalmedia Admin