பைத்தான் GUI
பைத்தானில் gui நிரல் உருவாக்க tkinter, wxpython, jpython போன்ற பல நூலகங்கள் உள்ளன. இதில் tkinter நூலகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது பைத்தானுடன் இணைந்து வருவதால் தனியாக நிறுவ வேண்டியது இல்லை. இதைப் பயன்படுத்தி வேகமாகவும் எளிமையாகவும் gui நிரல்களை உருவாக்கலாம்.
tkinter நிரல் உருவாக்குவது எப்படி?
tkinter நூலகத்தை இறக்குமதி செய்தல் import tkinter
முக்கிய சன்னலை உருவாக்குதல் m = tkinter.Tk() # m is the name of the window object
widgetsஐ முக்கிய சன்னலில் சேர்த்தல் b = Button(m,text=‘click’)
widgetsக்கு செயல் வடிவம் கொடுத்தல்
mainloop() : நிரலுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது. m.mainloop()
Geometry Manager
Geometry manager widgetsஐ நிர்வகிக்கிறது.
pack() method : Widgetsஐ துவக்கத்திலேயே வைக்கிறது.
grid() method : Widgetsஐ மேசை வடிவத்தில் வைக்கிறது.
place() method() : widgetsஐ குறிப்பிட்ட இடத்தில் வைக்கிறது.
பல்வேறு widgetகளை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்?
முக்கிய widgetகளையும், பொது வடிவத்தையும் உதாரண நிரலையும் விடையும் பார்ப்போம்.
Button
Buttonஐ நிரலில் சேர்க்கிறது.
பொது வடிவம் b = Button(master, option=value)
# button demo
import tkinter
window = tkinter.Tk()
window.title('TITLE')
button = tkinter.Button(window,text = 'click' )
button.pack()
window.mainloop()
Canvas
படம் வரையப் பயன்படுகிறது.
பொது வடிவம் w = Canvas(master, option = value)
# canvas demo
import tkinter as tk
master = tk.Tk()
w = tk.Canvas(master,width=40,height=60)
w.pack()
w.create_line(0,10,200,10)
master.mainloop()
CheckButton
எத்தனை வழிகளையும் தேர்ந்து எடுக்க பயன்படுகிறது.
பொது வடிவம் w = CheckButton(master, option = value)
from tkinter import *
window = Tk()
window.title('window title')
var1 = IntVar()
b = Checkbutton(window,text='Do you know tamil?', variable=var1)
b.grid(row=1,column=0)
window.mainloop()
Entry
பயனர் ஒரு வரியில் தகவலைக் கொடுக்க பயன்படுகிறது.
பொது வடிவம் w = Entry (master, option = value)
# demo for entry
from tkinter import *
window = Tk()
window.geometry('300x200')
window.title('Login window')
un = Label(window,text='User name ')
pw = Label(window,text='Pass word ')
unentry = Entry(window)
pwentry = Entry(window)
un.grid(row=0,column=0)
unentry.grid(row=0,column=1)
pw.grid(row=1,column=0)
pwentry.grid(row=1,column=1)
unentry.focus()
window.mainloop()
Frame
widgetகளுக்கான கலன். Widgetகளை குழுவாக்கி நிர்வகிக்க பயன்படுகிறது.
பொது வடிவம் w = Frame (master, option = value)
# demo for frame
from tkinter import *
window = Tk()
window.geometry('300x200')
frame = Frame(window)
frame.pack(side=TOP)
redbutton = Button(frame,text='Red', fg = 'red')
redbutton.pack(side=LEFT)
greenbutton = Button(frame,text='Green', fg = 'green')
greenbutton.pack(side=LEFT)
bluebutton = Button(frame,text='Blue', fg = 'blue')
bluebutton.pack(side=LEFT)
window.mainloop()
Label
தகவல் அல்லது படத்தை காட்டுவதற்கான பெட்டி.
General syntax w = Label(master, option = value)
# demo for Label
from tkinter import *
window = Tk()
window.geometry('300x200')
lbl = Label(window,text='www.tneducation.org')
lbl.pack()
window.mainloop()
மு.முருகன்
9865733514
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
www.tneducation.org













