ஒரு காலத்தில் அதாவது 1990 வரையி,ல் சோவியத் யூனியன் வீழ்வதற்கு முன்புவரை முதலாளித்துவ நாடுகளுக்கும் கேப்பிட்டலிசம் எனப்படும் முதலாளித்துவ கோட்பாட்டிற்கும் பெரும் சவாலாகவும், மற்றும் ஒரு மாற்று பொருளாதார கோட்பாடாகவும் இருந்து வந்தது கம்யூனிசம்.
ஆனால் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு இது முற்றிலும் மாறிப்போனது. முக்கியமாக உலகமயமாக்கலுக்கு பிறகு கம்யூனிசம் மற்றும் சோசலிசம் போன்ற கொள்கைகள் மேல், அதன் ஆதரவாளர்களுக்கே அபிமானம் குறைந்துபோனது.
இதற்கு ஒரு காரணம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் அதன் விளைவாக வந்த பஞ்சம் பட்டினி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையும் தான் காரணம்.
மற்றும் சோவியத் யூனியனை போல கம்யூனிச சித்தாந்தத்தையும் சோஷலிச சித்தாந்தத்தை மட்டுமே பின்பற்றி வந்த நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும் இதற்கு காரணம்.
இருப்பினும் இன்றளவும் கியூபா, வடகொரியா, சீனா போன்ற சில நாடுகள் கம்யூனிச கோட்பாட்டை இன்றளவும் பின்பற்றி வருவதாக கூறுகின்றனர்.
இதில் சீனா ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. முன்பு சோவியத் யூனியனை போட்டியாகவும் எதிரி நாடாகும் கருதி வந்த மற்ற முதலாளித்துவ நாடுகள் இப்பொழுது சீனாவுடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறது. இருப்பினும் சீனாவை சோவியத் யூனியனுடன் முழுமையாக ஒப்பிட முடியாது.
ஏன் எனில் சீனா 40 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பொருளாதாரத்தையும் சந்தையையும் மற்ற நாடுகளுக்கு திறந்து விட்டது. ஆதலால்தான் கடந்த 40 ஆண்டுகளில் சீனா மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
இருப்பினும் அது முழுமையாக முதலாளித்துவ நாடாக மாறி விடவில்லை. ஆம் அங்கு தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்கலாம், தொழிற்சாலைகள் அமைக்கலாம், ஆனால் அது அரசின் மேற்பார்வையில் தான் நடக்கும்.
இது பொதுவாக எல்லா நாடுகளிலும் நடப்பது தானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் சீனாவில் ஒருகட்சி ஆட்சிமுறை தான் அதாவது சீனாவில் கம்யூனிசக் கட்சி மட்டும்தான் இருக்கிறது.
பிற கட்சிகள் இயங்குவதற்கு தொடங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆகவே சீனாவின் கம்யூனிச கட்சிக்குள் மட்டுமே தேர்தல் நடக்கும் அதிலுள்ள பிரதிநிதிகளை தான் தேர்ந்தெடுக்க முடியுமே தவிர, வேறு எதுவும் செய்ய முடியாது.
மக்களால் சிந்தித்து எதற்கும் ஆதரவு அளிக்கவோ, அல்லது ஓட்டுப் போட்டோ எதையும் செய்ய முடியாது. இது சர்வாதிகாரம் தானே என்று நீங்கள் எண்ணலாம்.
ஆம் ஒரே ஒரு வித்தியாசம் தான். சர்வாதிகார ஆட்சியில் ஒரு தனி மனிதநாலோ அல்லது ஒரு குடும்பத்திநராலோ ஆட்சி நடைபெறும். ஆனால் சீனாவில் ஒரு கட்சியால் அல்லது கம்யூனிஸம் எனப்படும் கோட்பாட்டினால் நடைபெறுவதாக கூறிக்கொள்கிறார்கள்.
ஓட்டுரிமை எப்படி சீன மக்களுக்கு இல்லையோ அதைப்போல அந்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரமும் இல்லை. அனைத்துமே அரசாங்கத்திற்கு ஆதரவாக தான் இருக்க வேண்டும். எதிராக அங்கே யாரும் செயல் செயல்பட முடியாது.
இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் யூடியூப் கூகுள் போன்ற இணையதளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால் முன்பு சில தருணங்களில் அந்த வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக சிலர் கருத்துக்கள் கூறியதாகவும், அதை அந்நிறுவனங்கள் அப்படியே தணிக்கை செய்யாமல் வெளியிட்டதாகவும், குற்றம் சாட்டி தடை விதித்தது.
இதுமட்டுமல்லாமல் சீன மக்கள் மீது அந்த அரசு வேவு பார்க்கிறது கைபேசி கணினி தொலைக்காட்சி சிசிடிவி கேமராக்கள் போன்ற அனைத்து சாதனங்களையும் பயன்படுத்தி தனது மக்கள் மீது வேவு பார்த்து அரசுக்கு எதிராக எவரேனும் கருத்து கொண்டிருந்தால் அவர்களை களையெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் தான் மக்கள் எழுச்சி அடையாமல பார்த்துக் கொள்கிறது. ஆனால் வெளி உலகிற்கு இந்த வழிமுறைகளை சீனா கூறவில்லை. மாறாக சீனா பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதால் மக்கள் அந்த கோட்பாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் முழு ஆதரவு அளிப்பதாக கூறிவந்தது. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் இரு மடங்காக உயர்ந்துள்ளது, மற்றும் உற்பத்தித் துறையிலும் ஏற்றுமதி துறையிலும் தற்போது உலகிற்கே முன்னோடியாக சீனா இருக்கிறது.
ஆனால் இதற்குக் காரணம் கம்யூனிஸ கோட்பாடு அல்ல இதற்கு காரணம் சீனாவின் சர்வாதிகாரப் போக்கு. ஏனென்றால் மற்ற நாடுகளைப் போல் சீனா ஜனநாயக நாடு அல்ல. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம், மனித உரிமை ஆணையம் போன்றவை அனைத்தும் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு தான் செயல்படும்.
மற்றும் இவற்றையெல்லாம் நெறிப்படுத்த மற்றும் கேள்வி கேட்கும் உரிமை நீதிமன்றங்கள் நீதிபதிகள் இல்லை. இவ்வளவு ஏன் வலைதளங்கள் கூட அங்கே இல்லை.
எனவே உற்பத்தியைப் பெருக்க சீன அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம். சுற்றுப்புறச் சூழ்நிலையும், தொழிலாளர்களின் நலனயோ கருத்தில் கொள்ளத் தேவையில்லை, உற்பத்தியை பெருக்குவதற்கு ஏற்றார்போல் என்ன அனுமதி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
இதனால்தான் உலகின் மிகப்பெரிய கம்பெனிகள் அங்கே தொழிற்சாலைகள் நிறுவுகின்றன, ஏனென்றால் தொழிலாளர் நலம், குறைந்தபட்ச ஊதியம், மனிதநேய ஆணையம்,மாசுகட்டுப்பாட்டு வாரியம் என்று எதுவுமில்லை.
அங்கே குறைந்த பட்ச ஊதியமும் குறைவு சுற்றுப்புற சூழ்நிலை போன்ற வேறு எதையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை.
உலக பணக்காரர்கள் பயன்படுத்தும் செல்பேசிகளை தயாரிக்கும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களே சீனாவில் தான் தனது செல்பேசிகளை தயாரிக்கின்றனர். நீங்கள் யோசிக்கலாம் இதைப் போன்ற காரியங்கள் செய்தால் அது சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட நிலை சீனாவிற்கும் வந்துவிடுமே என்று, ஆனால் அப்படி எவரும் எண்ணா வண்ணம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது,
ஏனென்றால் சீனா சோவியத் யூனியனை போன்று அனைத்து தொழிற்சாலைகளும் அரசாங்கத்திற்கு கீழ்தான் இயங்க வேண்டும் என்ற கம்யூனிசக் கோட்பாட்டில் பல தலைவர்களை கொண்டுவந்தது, எனவே இது மக்களின் நலனுக்காக செயல்படும் கம்யூனிஸ அரசாங்கமும் இல்லை முதலாளித்துவ நாடும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய சர்வாதிகார அரசு.
ஆனால் இந்த வழிமுறைகள் மூலம் மற்ற உலக வல்லரசுகளுடன் போட்டி போட பல வியூகங்களை தீட்டி அதில் வெற்றியடைய முடிந்தது, இதற்கு முக்கிய காரணம் சீனப் பிரதமர் ஷி ஜிங்பிங். இவரின் வழிகாட்டுதலின் பேரில் எடுத்த அதிரடி பொருளாதார நடவடிக்கைகளால் சீனவின் பொருளாதாரம் மிகவும் மேம்பட்டது,
இதனால் சில மாதங்களுக்கு முன்பு கம்யூனிச கட்சி ஒரு சட்டம் இயற்றியது அதாவது அவரின் இறப்பு வரை அவரை பிரதமராக நீடிக்கலாம் என்பதுதான் அந்த சட்டம்.
இதைப்போன்ற ஒரு வலிமை மிக்க சூழ்நிலையில் சீனா இருக்கும் பொழுதுதான் கோரோனா வைரஸ் வந்தது, இது பரவத்தொடங்கியது முதல் அனைத்து உலக பொருளாதாரமும் நலிவடைய தொடங்கியது. இதில் சீனா வித்தியாசமானது ஏனென்றால் மற்ற நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுத்த அரசாங்கங்கள் ஆட்சி செய்கிறது.
ஆனால் அந்த நாடுகளிலேயே கொரோனா வால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் வேலையிழந்த மக்கள் போராட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சீனா போன்று ஜனநாயகம் இல்லாத ஒரு நாட்டில் இவ்வளவு நாள் பொருளாதார வளர்ச்சி மட்டுமே இந்த மக்களின் எழுச்சியை தடுத்து வந்தது, பொருளாதாரம் வீழும் சூழல் வந்தால், மக்கள் வேலை இழக்கும் சூழல் நேரிடும். மக்கள் அடுத்த வேலை உணவிற்கு கஷ்டப்படும் சூழ்நிலை வந்தால், அதன் பிறகு கம்யூனிச சித்தாந்த கோட்பாட்டிற்கு மேல் கட்டமைக்கப்பட்ட இந்த சர்வாதிகார அரசிற்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள், இதை சீன அரசியல்வாதிகளும் நன்கு உணர்வர்,
அப்படி ஒரு எழுச்சி வந்தால் அவர்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாது. சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட அதே நிலை தான் சீனாவிற்கும் ஏற்படும்,
இதற்கு ஒரு முக்கிய காரணம் சீனாவின் மக்கள் தொகையும் தான். ஏனென்றால் ஹாங்காங் போன்ற ஒரு சிறிய நகரத்தில் சர்வாதிகாரத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தையே சீன அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே சீனாவின் 130 கோடி மக்கள்தொகையில் இது சாத்தியமே இல்லை, தற்பொழுது வரும் செய்திகளும் இதையே குறிக்கிறது மக்கள் பலரும் வேலையில்லாமல் வேலை இழந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர், இயல்பு நிலை திரும்பி விட்டது என்று அரசு கூறி வந்தாலும் முன்பு இருந்ததைப் போன்ற உற்பத்தி தற்போது இல்லை.
பல தொழிற்சாலைகள் மூடியே கிடக்கின்றது. பெரும்பாலோனோர் வேலையில்லாமல் , அல்லது குறைந்த ஊதியத்தில் தற்போது வேலை செய்து வருகின்றனர்.
இதனால் பஞ்சம் தலை விரித்தாட வாய்ப்பு உள்ளது. இதே நிலை நீடித்தால் மக்களின் கோபம் அரசாங்கத்தின் மீது திரும்பும் என்று பல வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இதையேதான் சீனாவின் கம்யூனிச கட்சியினரும் உணர்ந்து உள்ளதாக கருதபடுகிறது. பொருளாதாரத்தை பழைய படி மீட்டெடுக்க முடியவில்லை என்றால், சோவியத் யூனியனை மக்கள் எப்படி நிராகரித்தார்களோ அதே நிலை சீனாவின் கம்யூனிச அரசிற்கும் வந்துவிடும் என்று கருதுகின்றனர்.













