கடந்த மே மாதம் முதல் ஜிஎஸ்டி NIL RETURN யை எஸ்எம்எஸ் மூலம் பைல் செய்வதற்கு மத்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது.
அதை எப்படி செய்வது என்பதை தற்போது காணலாம்.
NIL 3B என டைப் செய்த பிறகு உங்களுடைய GST எண்ணை டைப் செய்து அதன் பிறகு GST FILE செய்வதற்கு உண்டான மாதம் மற்றும் வருடத்தை டைப் செய்த பிறகு 14409 என்ற எண்ணுக்கு
SMS அனுப்ப வேண்டும். உதாரணமாக,
NIL 3B 33CRUPSK12549K 062020 என டைப் செய்து 14409 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
அனுப்பியவுடன் நீங்கள் ஜிஎஸ்டியுடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு OTP கிடைக்கப் பெறும்.
அந்த OTP யை கீழ்க்காணும் வழிமுறையில் மீண்டும் 14409 என்ற எண்ணுக்கே SMS அனுப்பி வைத்தால் NIL RETURN வேலை முடிந்தது. NIL RETURN க்கான ACKNOWLEDGEMENT உங்கள் மொபைல் எண்ணுக்கும், மெயிலுக்கும் வந்துவிடும்.
OTP FORMAT ::
CNF 3B 050500 (your otp) - டைப் செய்து 14409 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்
இதற்காக நீங்கள் ஆடிட்டரையோ அல்லது வேறு யாரேனும் ஒருவரின் உதவியையோ நாட வேண்டிய அவசியமில்லை.













