விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
வரும் புத்தாண்டு தினத்தன்று மாஸ்டர் டிரைலரை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை தளபதி விஜய்யின் படம் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.













