கடந்த ஆண்டில், எட்டு முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை சராசரியாக, 37 சதவீதம் அளவுக்கு
சரிவைக் கண்டுள்ளது என, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங் இந்தியா’வின்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவலால், 2020ம் ஆண்டில் தேவைகள் குறைந்ததன் காரணமாக,
விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் விற்பனை, ஆமதாபாதில் பெரிய அளவிலும்; புனேவில் குறைந்த அளவிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் தற்காலிகமாக பத்திரப் பதிவு கட்டணத்தை குறைத்ததை அடுத்து, மும்பை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.
மும்பையில் முழு ஆண்டில், 20 சதவீதம்அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வீடுகள் விற்பனை, 49 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. ஆமதாபாதில், 61 சதவீதம் சரிவு
ஏற்பட்டுள்ளது.













