வாட்ஸ்அப் கெடுபிடிகள் - புதியவற்றுக்கு மாறும் பயனாளிகள்

SOCIAL SHARE
Pin It

வாட்ஸ் ஆப் செயலியில் யார் வேண்டுமானாலும், என்ன தகவலை வேண்டுமானாலும் பதிவிட முடியும். பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதனால் பல்வேறு சிக்கல்களை வாட்ஸ் ஆப் எதிர்கொண்டது. இதையடுத்து பதிவுகளை பகிர்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு பதிவை அதிக பட்சம் 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும், அதிகம் பகிரப்பட்ட பதிவுகளை ஒரு முறை மட்டுமே மீண்டும் பதிவிட முடியும் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. இருந்தும் பிரச்னைகள் குறையவில்லை. இதையடுத்து முக்கிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் அமல்படுத்த உள்ளது. பகிரப்படும் தகவலின் உண்மைத் தன்மைக்கு பகிர்பவரே பொறுப்பு உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. பயனாளர்களின் மொபைல் எண், இருப்பிடம், புகைப்படம், வீடியோ உள்ளிட்ட தகவல்கள் சேமித்து வைக்கப்படும். அந்த அம்சத்துடன் கூடிய விதிமுறையை ஏற்றால் மட்டுமே அந்த அலைபேசியில் செயலி தொடரும். இல்லையெனில் செயலி அழிந்துவிடும். இந்த நடைமுறையை பிப்.,8 முதல் அமல்படுத்த இருப்பதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

இதனால், ஏராளமான பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து சிக்னல், டெலிகிராம் செயலியை, கடந்த சில தினங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். சிக்னல் செயலியில் பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை, கடந்த 38 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் ஐஸ்டோரில், அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலியில் சிக்னல் செயலி முதலிடத்தை பிடித்துள்ளது. வாட்ஸ்ஆப்பை பதிவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 11 % குறைந்துள்ளது.

ARUNACHALAM