உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது திட உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து, உடற்பயிற்சி செய்வது நல்லது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இதயத்தை பாதிக்குமா என்பதை விடவும், வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை மாற்றி, போதுமான தயாரிப்பு இல்லாமல், புதிய வகையான உடற்பயிற்சிகளை செய்யும் போது, எலும்பு, தசைகளை அதிகம் பாதிக்கும்.
அதே நேரம் இதய நோயிலிருந்து குணாமானவர்கள், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், புதிய, கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, நிச்சயம் இதயத்தை பாதிக்கும்.
இதய கோளாறு இருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், பாதிப்பில் இருந்து மீண்ட பின், தங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி, உடற்பயிற்சி செய்வதே பாதுகாப்பானது.
அந்தந்த வயதிற்கு ஏற்ற, பொதுவான சில உடற்பயிற்சிகளை அனைவரும் செய்யலாம். ஆனாலும் வயது, உடல் எடை, தேவைகளுக்கு ஏற்ப, பயிற்சிகளை செய்தால் கூடுதல் பலனை தரும்.
பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்தில், ஐந்து - ஆறு நாட்கள் தினமும், 20 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்க வேண்டியது அவசியம்.
நடக்கும்போது கைகளை நன்றாக வீசி நடப்பது தோள், கைகள், 'ரிலாக்சாக' உதவும் என, இதுவரையில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்திலும் உறுதியாகி உள்ளது.













