கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இயங்காமல் இருந்த சென்னை மெட்ரோ ரயில் சமீபத்தில் இயங்கத் தொடங்கியது. இருப்பினும் சென்னை மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்காமல் 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில்கள் மட்டுமே இயங்கி வந்தன.
இந்த நிலையில் சென்னையில் நாளை முதல் அலுவலக நேரங்களில் இனி 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை முதல் அலுவலக நேரங்களில் ஐந்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் விடுமுறை நாட்களில் மட்டும் 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயங்கும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.













