மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்ற தெலுங்கானாவைச் சேர்ந்த அழகி மானசா..! இரண்டாவது இடத்திறகு உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிக்ஷா தொழிலாளியின் மகள் வந்துள்ளார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.
விஎல்சிசி பெமினா நடத்தும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த வகையில் கடந்து ஆண்டிற்கான அறிவிப்பு வெளியானது.
மானசாவை அடுத்து அரியானாவைச் சேர்ந்த மனிகா சிஷோகந்த் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ஆகிய இருவரும் ரன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ரிக்சா தொழிலாளியின் மகள் ஆவார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநரின் மகள் மன்யாவைப் பொறுத்தவரை, பல தூக்கமில்லாத இரவுகள் மற்றும் பல வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்து உள்ளது.
குஷினகரில் பிறந்த மன்யா தனது பதிவில், கடினமான சூழ்நிலைகளில் வளர்ந்ததாகவும், உணவு அல்லது தூக்கம் இல்லாமல் இரவுகளை கழித்ததாகவும், ஒரு சில ரூபாயைக் காப்பாற்றுவதற்காக மைல்கள் நடந்து சென்றதாகவும் கூறியிள்ளார். புத்தகங்கள் மற்றும் ஆடைகளுக்காக தான் ஏங்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டம், தனக்கு ஒருபோதும் சாதகமாக இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
23 வயதான மானசா தெலுங்கானா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டம் பெற்ற மாணவி. அதோடு டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார். மானசா தற்போது நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.













