ஸ்ரீ கிருஷ்ணர் வசிக்குமிடம்

SOCIAL SHARE
Pin It

நான் சிறுவயதிலிருந்தே ஸ்ரீகிருஷ்ணர் இப்பூமியில் அவதாரம் செய்த தினமான  கோகுலாஷ்டமியைக் கடைப்பிடித்து வருகிறேன்.
 
மதுரா யாத்திரை
 
கோயில்களில்  அவருடைய கதைகளையெல்லாம் கேட்டிருக்கிறேன். 
 
நாங்கள் தில்லியில் வசித்து வந்ததால் கிருஷ்ணஜெயந்தி தினத்தில் பிர்லா மந்திருக்குச் செல்வோம்.  அங்கு சுவர்களில்  கிருஷ்ணரின்  வாழ்க்கை வரலாறு, ஓவியங்களாக வரையப்பட்டிருக்கும்.
 
அந்த சித்திரங்கள¢ என்னை மிகவும் ஈர்த்தது. 
அப்போதே நான் முடிவு செய்திருந்தேன்.. ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த மதுரா நகருக்குச் செல்ல வேண்டும் என.

சரித்திரம் வாய்ந்த மிகப் பழைமையான நகரம்.
 
அதன் வரலாறு மகராஜா உக்ரசேனா( கம்சனின் தந்தை)  வாழ்ந்த காலத்திலிருந்து அடையாளம் காணப்படுகிறது. அவர் ஏசு கிறிஸ்து அவதரிப்பதற்கு முன்னரே     ஆட்சி செய்தவர்.
 
நான் என் துணிகளுடன் ஒரு நாட்குறிப்புப் புத்தகம், ஒரு பேனாவையும் எடுத்துக் கொண்டு, தில்லியிலிருந்து மதுரா, பிருந்தாவன் செல்லும் பேருந்தில் ஏறினேன்.  மூன்றரை மணி நேரப்பயணத்தில் பேருந்து மது¬ராவை அடைந்தது.
 
கிருஷ்ணரின் ஜென்ம பூமியை அடைவதற்கு முன் நான் லக்ஷ்மி நாராயணன் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு ஒரு ரிக்ஷாவை வைத்துக் கொண்டு மதுராவை அடைந்தேன்.  கௌண்டரில் டிக்கெட் பெற்றுக் கொண்டு படிக்கட்டில ஏறி உச்சியை அடைந்தேன்.மிகப் பெரிய இரண்டு சுவர்கள் கண்களுக்குத் தெரிந்தன. அந்த 2 சுவர்களின் ஒருபுறம் ஓளரங்கசீப் மஜித்  மற்றொரு புறம், கிருஷ்ணரின் தாய் தேவகியும்  தந்தை வசுதேவரும் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை. 
 
சிறைச்சாலை அடித்தளத்தில் இருப்பதாக வழிகாட்டி கூறினார். நான் அங்கே சென்றேன். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த் இடம் அதுதான். அந்த இடத்தில் நான் நின்ற நொடியில் என் மனம் அந்த பழங்காலத்தை நோக்கிச் சென்றுவிட்டது.   நான் என்னுடைய வணக்கத்தைச் செலுத்தி எனக்கு ஆசிகளை வழங்கும்படி அங்கு வாழ்ந்தவர்களிடம் வேண்டிக்கொண்டேன்.
 
அடுத்ததாக நான் துவராதீஷ் ஆலயத்தை அடைந்தேன். இது ஸ்ரீகிருஷ்ணர் அரசனாகப் பதவியேற்ற சமயத்தில அவரால்  கட்டப்பட்டது என்று அங்கு வாழும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
 
மதுரா கேட்ஸ்
 
உள்ளூர்வாசி ஒருவரின் மூலம் மதுரா நகரில் 25 கேட்ஸ் இருப்பதாக அறிந்து கொண்டேன். அதுவும் அவை யமுனையின் கரையில் அமைந்திருக்கின்றன. மக்கள் அங்கே யமுனை நீரில் நீராடல் செய்கின்றனர்.
 
நானும் அந்த கேட்களில் ஒன்றை அடைந்தேன். அங்கே மக்கள் கூட்டமாக நின்று கொண்டு ஆமைகளுக்க உணளித்துக் கொண்டிருந்தனர். அப்படிச் செய்தால் பாவ்ங்கள் தீர்ந்து புண்ணியம்  கிட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.  அதன் பின் ஒரு பழைய அருங்காட்சியத்திற்குச் சென்றேன்.அங்கே குஷான வம்சத்து அரசன் கனிஷ்கரின் சிலையை காண முடிந்தது.
 
பிருந்தாவனத்தில..
 
என் அடுத்த இலக்கு பிருந்தாவனமாக இருந்தது.  மதுராநகரை ஒட்டியிருந்த புனித நகரம இது. உண்மையில் இது ஒரு காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்திருந்த வனமாக இருந்திருக்கிறது.
 
ஸ்ரீகிருஷ்ணர் இங்குதான் தன் ராசலீலை நடன்த்தை கோபிகளுடன் ஆடியிருக்கிறார்.
 
அதே போல் கொடூர விஷம் மிகுந்த காளிங்கனின் தலையில் ஏறி நின்று நர்த்தனமாடி அதனை அடக்கியும் இருக்கிறார்.
 
பிருந்தாவனம் இப்போது கோயில்களால் நிறைந்திருக்கிறது.   நான் இஷ்க்கோன் ஆலயம்,   பிஹாரி ஆலயம் ஆகியவற்றிற்குச் சென்றேன். இவை மிகவும் பழமையான பிரசித்திப் பெற்ற ஆலயங்கள்.
 
பிருந்தாவனத்திற்கு வருபவர்கள், தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைத்ததிற்காக  ஸ்ரீகிருஷ்ணருக்கு நன்றி சொல்வதற்காக வருகிறார்கள்.
 
யமுனை ஆற்றங்கரையில் பிஹாரி ஆலயம் ஆச்சரியமான கட்டிடக் கலை அழகுடன் திகழ்கிறது.  நம் விருப்பப்படி இங்குள்ள பண்டிட்கள் பூஜைகளை செய்து பிரசாதம் தருகிறார்கள்.
 
இஷ்க்கோன் ஆலயம் வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது.இங்கே ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் இராதையின் விக்ரஹங்கள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்டுகின்றன.  இங்கு லங்கார் எனப்படும் பிரசாதம் வழங்கப்படுகின்றன. மிகுந்த பசியோடு இருப்பவர்கள் இஷ்கோன் ஆலயத்தில் பிரசாதததை வாங்கி பசியை போக்கிக்கொள்ள முடியும்.
 
கோயில் உள்ளே ஸ்ரீகிருஷ்ணரைப் போற்றும்  பஜன் இசை ஒலித்துக் கொணடிருக்கின்றன. அவை காதுகளுக்கு இனிமையத் தருகின்றன.. 
 
சிறு சிறு கடைகளில்  ஸ்ரீகிருஷ்ணரின் அழகிய வண்ண ஓவியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.  கீதை போன்ற ஆன்மீக புத்தகங்களும் விற்கப்படுகின்றன.
 
பிருந்தாவனத்தில் பார்க்க வேண்டிய கோயில்கள் நிறைய. துளசி வனம், பிரேம் மந்திர், காளியனாங் மந்திர் போன்றவை யமுனைக்கரையில் அமைந்துள்ளன. நான் மூன்று கோயில்களை மட்டும் தரிசித்து விட்டு மதுரா திரும்பினேன்.  அங்கிருந்து தில்லிக்கு பேருந்து பிடித்தேன்.
 
சிறுவயதில் நான் கேட்ட கதைகள், வழிவழியாக பெரியோர்களால் சொல்லப்படும் கதைகள், மற்றும் நான் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி கேட்ட பாடல்கள் யாவும், நான் கிருஷ்ண ஜன்மபூமியில் உயிர்பெற்றிருப்பதைக் கண்டேன்.   உண்மையில் ஸ்ரீகிருஷணர் அவதரித்த பூமிதான் என்பதை உணர்ந்தேன்.
 
 

ARUNACHALAM