கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் ஆலயம்

SOCIAL SHARE
Pin It

தஞ்சை பெருவுடையாய் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தை அமைத்த மாபெரும் தமிழ் மன்னன் முதலாம் இராஜ ராஜ சோழனின் மகன் முதலாம் இராசேந்திர சோழனால், அரியலூர் மாவட்டத்தில் கங்கைக் கொண்ட சோழபுரம் எனும் ஊரில் கட்டப்பட்ட சிவன் கோயில்

வடக்கே கங்கை நதிவரை படையெடுத்துச் சென்று வங்க மன்னன் மகிபாலன் ஆண்ட பால பேரரசை வென்று திரும்பியதன் நினைவாக இவ்வூரையும், இங்கொரு கோயிலையும் எழுப்பினான் இராசேந்திர சோழன் என்கிறது சரித்திரம்.

கோயிலின் அழகையும், இதன் அமைப்பையும் கண்டு இக்கோயில் பெண்தன்மை நிறைந்த கோயில் என்கின்றனர் ஆய்வாளர்கள். இக்கோயில் கிபி 1035 இல் கட்டப்பட்டதாக கோயில் கல்வெட்டுக்களின் தகவலை வைத்து கூறுகின்றனர்.

தன் தந்தை இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தைப் போல் தானும் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இராசேந்திர சோழனின் மனதில் இருந்திருக்கிறது. வடதேசத்தின் மீது படையெடுத்து (விஜயாதித்தன்)சாளுக்கியர்களை வென்று வங்க தேசத்து மன்னன் மகிபாலனை வெற்றிக் கொண்டு திரும்பிய பின்,

தன் வெற்றியின் நினைவாக ஒரு ஊரையும். தான் ஆசைப்பட்டபடி அங்கே சிவனுக்கு ஒரு கோயிலையும் கட்டினான். காவிரி ஆற்று நீர் இவ்வூருக்கு வர வேண்டும் என்பதற்காக காவிரிலியிலிருந்து வாய்க்கால் கொண்டு வந்து ஒரு ஏரியையும் அமைத்தான், அதற்குச் சோழகங்கம் என்று பெயர் சூட்டினான்.

இந்த ஏரி தற்போது பொன்னேரி என்றழைக்கப்படுகிறது

தான் வடநாட்டில் வென்ற நாடுகளின் அரசர்களில் தலையில் கங்கை நீரை கொண்டுவரச் செய்து, இந்த எரியில் ஊற்றச் செய்து, அந்நீரில் பிரகதீசுவரரின் ஆலயத்தின் குடமுழுக்கைச் செய்ததாக திருவேலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

மூவர் உலா, தக்கையாப் பரணி போன்ற நூல்களில் கங்கைக் கொண்ட சோழபுரம் பற்றிய விரிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.

கங்கைக் கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தபின் இராசேந்திர சோழன் சோழநாட்டின் தலைநகராக அதை அறிவித்தான்.. அதன் பிறகு கங்கைக் கொண்ட சோழபுரம் சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக இருந்து வந்தது. ரா«ச்ந்திரனுக்குப் பின்னர் வந்த மன்னர்களும் இந்நகரிலேயே முடிசூட்டிக¢கொண்டு ஆட்சி செய்தனர்.

இந்நகரம் கோட்டைச் சுவர்களுடன் கட்டப்பட்டு, அரண்மனைகள் மற்றும் நடுவில் கோயில் எனத் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை 16 கி.மீ பரப்பில் கட்டப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இராசேந்திரனுக்குப் பின் அரசாண்ட முதலாம் குலோதுங்க சோழன் நகரைச்சுற்றி கோட்டைச் சுவரை அமைத்திருககிறான்.

13 நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியப்படையெடுப்பால் இந்நகரம் அழிக்கப்பட்டது. கோயிலை மட்டும் அழிக்காமல் விட்டு வைத்திருக்கின்றனர்.

கோயில் அமைப்பு

இககாயில் சோழர்களின் கட்டிடக் கலையின் சிறப்பினை பறைசாற்றுகிறது. இராசேந்திரனின் விருப்பத்திற்கிணங்கி தஞ்சைப் பிரகதீசுவரர் ஆலயத்தைக் கட்டிய சிற்பிகளே இக்கோயிலையும் கட்டியுள்ளார்கள்.

170 மீட்டர் நீளமும், 98 மீட்டர் அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய மேடையை அமைத்து அதன் மேல் இக்கோயிலைக் கட்டியுள்ளனர்.

நடுக்கருவறையில் கோயிலின் மூலவரான பிரகதீசுவரர் லிங்க வடிவில் அமைந்துள்ளார். லிங்கத்தின் உயரம் 13 அடி. அடிப்பகுதி சுற்றளவு 59 அடி சுற்றளவு. கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும், முன¢மண்டபமும் அமைந்துள்ளன. கருவறை வாயில் இருபுறமும் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் உள்ளனர்.

கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்குமாறு கருவறையை நோக்கியபடி நந்தி சிலை( 660 அடி) அமைக்கப்ப்டடுள்ளது. கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் விதத்தில் சந்திரக்காந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுள் தெற்குநோக்கிய சந்நிதியில் பெரியநாயகி அம்மன் 9.5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி 5 கருவறைகளும் வெளிபுறமகா சிம்மக் கிணறும் அமைந்துள்ளன.

இக்கோயில் தொல்லியல் துறையினரால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறத. யுனெஸ்கோ அமைப்பு, இககாயில், தஞ்சை பெரிய கோயில் மற்றும் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ அமைப்பினனால் பொது ஊழி உலகப் பாரம்பரியக் களப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கோயிலின் வெளிப்புற மாடங்களில் சோழர்கால சிற்பக்கலையை பறைசாற்றும் வகையில் சுமார் 50க்கும் மேறப்ட்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் பிற சிவன் கோயில்களைப் போலவே தினசரி நான்குமுறை வழிபாடுகள் சைவ ஆகமமுறைப்படி நடைபெறுகின்றன. மேலும் மகாசிவாரத்திரி, ஐப்பசி பௌர்ணமி, மார்கழி திருவிழா போன்ற சிறப்பு நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 

ARUNACHALAM