சமூக ஊடக வலைதளமான டிவிட்டர் சேவையில், இன்று காலை முதலே பயனர்கள் சிக்கல்களை சந்தித்தனர். ட்வீட்களை பதிவு செய்வதிலும், தகவல்களை பார்ப்பதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. சர்வர் பிரச்சினை காரணமாக உலகளவில் டிவிட்டர் இணையதளம் முடங்கியுள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், ட்விட்டரில் தகவல்களை போஸ்ட் செய்வதில் உள்ள சிக்கல்களை சரி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டுவிட்டர் கணக்கை விரைவில் பயன்படுத்தலாம்” என தெரிவித்தது.
டுவிட்டர் பாதிப்பு குறித்து தகவல்களுடன் வெளியிட்ப்பட்டுள்ள அறிக்கையில், ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து இதுவரை 81 ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலையில் ஏற்பட்ட சிக்கல் சிறிது சரியானது. ஆனால், மாலையும், ட்விட்டர் முடங்கியதால், பயனர்களால் டிவிட்டரை பயன்படுத்த முடியவில்லை.
கடந்த மார்ச் மாதம், இதே போன்று ஒரு நிகழ்வாக, சமூக ஊடக வலைதள சேவைகள் முடங்கின. ஆனால், அப்போது ட்விட்டரில் பாதிப்பு எதுவும் இல்லை.













