செவ்வாய்க்கிரக ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது

SOCIAL SHARE
Pin It
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் தற்போது நடத்தப்படும் ஆய்வுகளுக்கு ரோவர் என்ற வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆய்வுப் பணிகளுக்கு இலகுரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக கடந்த ஆண்டு இந்தச் சோதனை வெற்றியடைந்தது.
 
ஒரு கிலோ 800 கிராம் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர், ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் இயங்குவதை விட அதிக வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஜினிட்டி  (Ingenuity) என்ற  பெயருடைய இந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டதாகும்.
 
பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்  தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2வது முறையாக இது ஒத்தி வைக்கப்பட்ட. தற்போது செவ்வாய் கிரகத்தில்  இன்ஜினிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு உள்ளது.
 
விடாமுயற்சி என பொருள்படும் பெர்சிவியரன்ஸ்" என்ற விண்கலத்தை, நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
 
7 மாத கால பயணத்திற்கு பிறகு இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும். செவ்வாய் கோளின் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தும் அதிநவீன கருவிகள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக துளையிடும் இயந்திரம், 23 அதிநவீன கேமிராக்கள், 2 மைக்ரோபோன்கள் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு சராசரி கார் அளவில், ஆறு சக்கரில் ஓடும் `Perseverance' ரோவர் 7-அடி கொண்ட ரோபோ பாறையைத் துளைத்து, மாதிரிகளைச் சேகரிப்பதற்கான திறன் படைத்தது. செவ்வாய்க்கிரகத்தில் உள்ள மாதிரிகளைச் சேமித்து பூமிக்கு அனுப்ப இந்த ரோவரில் 43 மாதிரி குழாய்கள் உள்ளன, ஒவ்வொன்றும் பூமியிலிருக்கும் நுண்ணுயிர்களை அகற்றுவதற்காகக் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி அனுப்பப்படுகின்றன.

ஒவ்வொரு குழாயிலும் 15 கிராம் எடையுள்ள மாதிரிகள் வைத்திருக்க முடியும். பூமிக்குத் திரும்புவதற்குள் 0.5 கிலோ கிராம் எடையுள்ள மாதிரிகளைச் சேகரிப்பதே இதன் குறிக்கோள். 2026-ம் ஆண்டில் மீண்டும் இந்த மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வரும் திட்டம் தொடங்கப்படும்.
 
ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுவரும் 'Curiosity' ரோவரை விட அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம், சீனாவை தொடர்ந்து இந்த மாதத்தில் செவ்வாய் கோளுக்கு அனுப்பப்படும் மூன்றாவது விண்கலம் இதுவாகும்.

ARUNACHALAM