அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஓட்டுநர் இல்லா தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலோன் மஸ்கின் நிறுவனம் தயாரித்த கார் ஆகும். ஹூஸ்டனுக்கு வடக்கே சனிக்கிழமை பிற்பகுதியில் வாகனம் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது, அது ஒரு மரத்தில் மோதி தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான வாகனத்தின் சக்கரத்தில் யாரும் சிக்கிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஆனால் இன்னும் விசாரணை முழுமையடையவில்லை," என்றும், விபத்து நடந்தபோது காரின் முன்புற இருக்கையில் பயணிகள் இருக்கையில் ஒருவரும் மற்றவர் பின் இருக்கையிலும் அமர்ந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் டிரைவர் பக்க ஏர்பேக் பயன்படுத்தப்பட்டதா, காரின் டிரைவர் உதவி அமைப்பு செயல்பட்டதா என்பதை போலீசார் இன்னும் தீர்மானிக்கவில்லை.
”தானியங்கி கார்களுக்கு வழங்கும் ஓட்டுநர் உதவி அமைப்புகள் தங்கள் வாகனங்களை முழுமையாக இயக்கிவிடும் என்பது உறுதியாக கூறமுடியாது என்றும், அதை மேற்பார்வை செய்வது அவசியம் என்றும்” டெஸ்லாவின் இணையதளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் தானியங்கி காரில் பயணிப்பவர்களின் வாகனத்தில் ஓட்டுநர்கள் தூங்குவதை பார்க்க முடிகிறது. அல்லது நீண்ட நேரம் ஸ்டியரிங்கில் கைகள் இல்லாமல் இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது.
சமீபத்திய விபத்துக்களைத் தொடர்ந்து டெஸ்லாவின் Semi-automated driving system குறித்த ஆய்வுகள் அதிகரித்து வருவதோடு, அதன் புதுப்பிக்கப்பட்ட "முழு சுய-ஓட்டுநர்" மென்பொருளை அதிக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் டெஸ்லா வாகனங்கள் விபத்துக்குள்ளானது குறித்து 27 விசாரணைகள் நடைபெற்றுவருவதாக அமெரிக்க வாகன பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. மூன்று விபத்துக்கள் அண்மையில் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.













