வாட்ஸ்அப்பில் உங்கள் தொலைபேசியைத் தொடாமல் அல்லது தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம் என்பது தெரியுமா. இது தவிர, சேட்டிங்கை இன்னும் சுவாரஸ்யமாக ஆக்கும் அம்சங்களும் உள்ளன. இருப்பினும், இதற்காக செட்டிங்குகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
பல முறை பிறர் நமக்கு அனுப்பும் தகவல்களுக்கு பதிலளிக்க மறந்து விடுகிறோம், அல்லது நேரம் இருப்பதில்லை.. இதற்கு, வாட்ஸ்அப்பில் உங்கள் தொடர்பிலிருக்கும் எந்த எண்ணையும் திறக்கலாம். நீங்கள் விரும்பினால், செய்தியைப் Unread, என மார்க் செய்து பிறகு பதிலளிக்கலாம். இந்த செட்டிங்கில் , அன்ரீட் என குறிப்பிட்ட தொடர்பு எண்ணில் ஒரு மார்க் தோன்றும், இது உங்களுக்கு பின்னர் நினைவூட்டுகிறது. இதற்காக, Android தொலைபேசியில் சேட்டை அழுத்திப் பிடிக்க வேண்டும். வலது பக்கத்தில், ஒரு மார்க் ஆன்ரிட் ஆப்ஷன் தோன்றும். iOS இல் சேட்ட்டின் வலது பக்கத்தை ஸ்வைப் செய்யும் போது, Unread ஐகான் தோன்றும். அதன் மீது தட்டவும்.
தொலைபேசியைத் தொடாமல், தட்டச்சு செய்யாமல், பதில் அனுப்புவதற்கு கூகிள் அஸிஸ்டென்ட் உதவியை நீங்கள் எடுக்க வேண்டும். இதில், நீங்கள் கூறுவதை அப்படியே தட்டச்சு செய்யும்.
வாட்ஸ்அப் சேட்டிங்கை மேலும் சுவார்ஸ்யமானதாக ஆக்க , புதிய எழுத்துருவை முயற்சி செய்யலாம். இதில் சாய்வு எழுத்துருவைத் தேர்வு செய்யலாம். வார்த்தையை போல்ட் செய்யலாம். Bold செய்ய வேண்டிய எழுத்துக்களின் முன்னும் பின்னும் ஸ்டார் இணைத்தால், உங்கள் செய்தியை அனுப்பும்போது, அது Bold எழுத்துருவில் காணப்படும். மறுபுறம், சாய்வு எழுத்துருவைப் பொறுத்தவரை, வார்த்தையின் முன்னும் பின்னும் அண்டர் ஸ்கோர் குறியை பயன்படுத்தப்பட வேண்டும்.













