மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
18 வயதிற்கு மேற்பட்டு 45 வயதிற்கு உட்பட்ட, கால் / கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் காதுகேளாத பேசும் திறனற்ற, மிதமான மனநிலை பாதிக்கப்பட்டவர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மனவளா்ச்சிகுன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்
தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 40 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மனவளா்ச்சி உதவித்தொகை மாதம் ரூ.1500- வழங்கப்படும்
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டம்
பாதிப்பின் சதவிகிதம் குறைந்த பட்சம் 75 சதவிகிதத்திற்கு மேல் இருத்தல் வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500- வழங்கப்படும்
தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்
தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500/- வழங்கப்படும்
தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்
தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவாரக இருத்தல் வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500/- வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் (பி.ஹெச்.பி ஐ.ஜி.ஓ.ஏ.பி)
40% மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட கை, கால் குறைபாடுடையவர், மனவளா்ச்சி குன்றியவர், மூளை முடக்குவாதத்தால் பாதிப்படைந்து குணமடைந்தவர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றவர், காது கேளாத, பேச்சுத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளில் 75% மேல் குறைபாடுடைய 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்தந்த தாலுகாவின் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அவர்களுக்கு விண்ணப்பித்து உதவி பெறலாம்
திருமண நிதி உதவி திட்டம்
பார்வையற்றவரை திருமணம் செய்துகொள்ளும் பார்வையுள்ள நபருக்கு திருமண நிதியுதவி
காது கேளாத, பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி
மாற்றுத்திறனாளியினை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவிமுதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.
18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.திருமணம் பதிவு செய்திருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளியை மணந்து கொள்ளும் நபர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளியினை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளி திருமண திட்டத்தில் இருவரும் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.
அ. பொதுதிட்டம்
காசோலை ரூ.12,500- தேசிய சேமிப்புபத்திரம் ரூ.12,500- மொத்தம் ரூ.25,000 (திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது)
ஆ. பட்டம் / பட்டயம் பெற்றவர்களுக்கான திட்டம் காசோலை ரூ.25,000- தேசிய சேமிப்புபத்திரம் ரூ.25,000- மொத்தம் ரூ.50,000
(திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது)
தேசிய ஊனமுற்றோருக்கான நிதி மேம்பாட்டு கழகம் (NHFDC)
வங்கிகடன் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தொடர்பு கொண்டு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று பயனடையலாம்
18 வயது முதல் 55 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் கடனுதவி பெறலாம் இத்திட்டத்தில் ரூ.25,000 வரை தனிநபர் ஜாமீன், 25,000 முதல் 50,000 வரை இரண்டு நபர்கள் ஜாமீன் கையொப்பம் இட வேண்டும். ரூ.50,000க்கு மேல் ரூ.25,00,000/– வரை (சொத்து அடமானத்தின்) பேரில் வங்கி கடன் வழங்கப்படும். ஆண்களுக்கு 5சதவிகிதம் பெண்களுக்கு 4சதவிகிதம் குறைந்த பட்ச வட்டியாக வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் கடனை முழுமையாக செலுத்தி முடிப்பவர்களுக்கு வட்டித்தொகை முழுமையும் விலக்கு அளிக்கப்படும்.
பாரதபிரதமர் வேலை வாய்ப்பு பெருக்கத்திட்டம் (PMEGP), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுயதொழில் வழங்கும் திட்டம் (UYEGP)
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வங்கியில் பெறும் மொத்தக்கடன் தொகையில் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையில் 5% மானியமாக வழங்கப்படும்
காது கேளாத இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்
முதல் 3 வரையிலான காது கேளாத இளஞ்சிறார்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சியளித்து தொடர்கல்வி வழங்கப்படும்
சிறப்புப்பள்ளிகள்
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சிறப்புப்பள்ளிகளில் உணவு, உடை மற்றும் தங்குமிட வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும்
மனவளர்ச்சி குன்றிய இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்
0 முதல் 6 வரையிலான மனவளர்ச்சி இளஞ்சிறார்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சியளித்து தொடர்கல்வி வழங்கப்படும்
மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்
10 வயது புர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு மேற்கொள்ள தகுதியானவர்கள், நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் மூக்குக்கண்ணாடி பெறுவதற்கான உதவித்தொகை வழங்கப்படும்
தேசிய அறக்கட்டளை மாவட்ட உள்ளுர் குழுமம், புதுக்கோட்டை
18 வயது புர்த்தியடைந்த மனவளர்ச்சி குன்றியவர்கள், புறஉலகு சிந்தனை இல்லாதவா்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வகை மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்ட உள்ளுர் குழு மூலமாக பாதுகாவலர் நியமனச்சான்று மற்றும் இதர உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.













