கொரோனா பரவல் காரணமாக, தினமும், 1,000 பக்தர்கள் மட்டுமே, சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை, 5,000 ஆக உயர்த்த, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சபரிமலையில், வரும், 26ம் தேதி முதல், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களிடம், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருக்க வேணடும். அதுவும், தரிசன நேரத்துக்கு முன், 48 மணி நேரத்துக்குள் சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்ற சான்று பெற்றவர்கள் மட்டுமே, ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்று கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.













