கர்ப்பம் என்றே அறியாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை

SOCIAL SHARE
Pin It

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணான கிளாரி வைஸ்மேன், வழக்கம் போல் பார்டி, ஆடல், பாடல், என காலத்தை கழித்து வந்தார். 

திடீரென்று ஒரு நாள் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, அவள் தனது அம்மாவை அழைத்தாள். அவளது அம்மா உடனேயே அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். அங்கே அவளுக்கு, 5 நிமிடத்தில் குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமான குழந்தையாகவும் இருந்தது. அதன் எடை 3.48 கிலோவாக இருந்தது. 

அந்த பெண்ணிற்கு, பிறந்தது தனது குழந்தை தான் என நம்பவே முடியவில்லை.  ஏனென்றால், அவருக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லை. திடீரென குழந்தை பிறந்தது, அவருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. 

குழந்தை பிறந்த முதல் 12 மணி நேரத்திற்கு, கிளாரி வைஸ்மேன் குழந்தையின் முகத்தை கூட பார்ப்பதை தவிர்த்தார். அந்த அளவிற்கு அவர் அதிர்ச்சியில் இருந்தார்.

குழந்தை பிறந்தபோது, ​​கிளாரிக்கு 25 வயது, அவரது  காதலனுக்கு 21 வயது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த க்ளாரிக்கு, கர்ப்ப்பமாக இருந்த காலத்தில் உடல் எடை எதுவும் அதிகரிக்கவும் இல்லை.

ARUNACHALAM