கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும் கருஞ்சீரகம்

SOCIAL SHARE
Pin It

கருஞ்சீரகத்தில்  இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான அமினோ அமிலங்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் என பலவிதமான சத்துக்களையும் கொண்டுள்ளது.

நாள்பட்ட புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் கருஞ்சீரகம் குணப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, மனிதர்களின் நோய் எதிர்பாற்றல் முறைமையை கருஞ்சீரகம் வலுப்படுத்தும் என்றும் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றது,

கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது.

மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி (PCOD) எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic Ovary syndrome) பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும். 
 
கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும் அருமருந்து கருஞ்சீரகம். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பப்பையில் இருக்கும் கசடுகள் சுத்தமாக வெளியேறிவிடும்.  

ARUNACHALAM