நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை - வடகொரியா

SOCIAL SHARE
Pin It

3,000 டன் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானத்தை வட கொரியா முடித்துவிட்டதாக தென் கொரியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, சரியான நேரத்தில் அதைத் இயக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும் தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. 

"2019 ஜூலை மாதத்தில் 3,000 டன் நீர்மூழ்கிக் கப்பல் குறித்து வடகொரியா செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுவிட்டது என தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் நம்புகின்றனர்".

நீரில் மூழ்கக்கூடிய ஏவுகணை சோதனையை, ஒரு புதிய நிலைக்கு நகர்த்தியதாக வட கொரியா கூறியுள்ளது, இது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையாக (submarine-launched ballistic missile (SLBM)) இருக்கலாம் என்று சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இந்த செய்தி உண்மையானதாக இருந்தால், வட கொரியாவின் முதல் உண்மையான பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கும். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற வருடாந்திர ராணுவ அணிவகுப்பில் வடகொரியா அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை ஆயுதங்களை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM