மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் சித்திரை முதல் தேதி ( ஏப்.,14), ஆடிப்பெருக்கு (ஆக.,3) மற்றும் தைப்பூசம் (2022 ஜன.,18) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொது மக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும். அந்த நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
அந்த விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற பதிவுத்துறை தலைவரின் கோரிக்கையை பரிசீலனை செய்து ஏப்.,14, ஆக.,3 மற்றும் 2022 ஜன.,18 ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ள வேண்டும். அந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.













