தமிழ்ப் புத்தாண்டைப் பொறுத்தவரை தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு சித்திரை- 1. இதை ஏற்றுக்கொள்பவர்கள் பலருண்டு. இதேபோல தை -ஒன்றாம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்பது முன்பு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசின் நிலைப்பாடு. இதை ஏற்றுக்கொள்பவர்களும் பலருண்டு. தமிழார்வலர்கள் பெரும்பாலானவர்கள், நீண்டகாலமாக தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லிவருவதும் தை -ஒன்றாம் தேதியைத்தான். தை -1 தமிழ்ப் புத்தாண்டு என்றால், அதற்கு இன்னும் 22 நாள்கள் இருக்கின்றன.
இத்தகைய குழப்பங்களுக்கு இடையில், “உண்மையில் தை ஒன்றாம் தேதி என்பது டிசம்பர் 22 தான்.
தமிழர்களின் புத்தாண்டு அன்றுதான் பிறக்கிறது'' என்று புதிதாக ஒரு விஷயத்தை முன்வைக்கிறார் கோயில் கட்டடக்கலை நிபுணரும், தமிழ் ஆராய்ச்சியாளருமான தென்னன் மெய்யம்மன். ஆண்டு மற்றும் நாள்கள் குறித்து மரபு வழியிலான ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வரும் தென்னன் மெய்ம்மன், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலைக் கல்லூரியில், கட்டடக்கலைப் பிரிவில் விரிவுரையாளராக இருந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருப்பவர்.
“அதெப்படி? நாம் பயன்படுத்தும் காலண்டர் சொல்லும் செய்தி தவறாக இருக்க முடியும்? பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான தமிழ் மாதங்களையும், ஆண்டையும்தானே நாம் பயன்படுத்தி வருகிறோம்?” என்று கேட்டால், “காலண்டர் சொல்லும் செய்தி மட்டுமல்ல... காலண்டரே தவறாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று அடித்துச் சொல்லும் மெய்யப்பன்,“இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் வானவியல் அறிவு தேவை. இதை நான் மேம்போக்காகச் சொல்லவில்லை. மரபு வழியில், இருபதாண்டுகளுக்கும் மேலாக நானும், என் குழுவினரும் வானவியல் ஆய்வுகளைச் செய்தபிறகே சொல்கிறோம். இதுகுறித்து பெரிய அளவில் யாருக்கும் தெரியாததால் எங்கள் குரலில் இருக்கிற உண்மை பலருக்கும் பிடிபடவில்லை. உண்மை தெரிந்த வானவியல் அறிஞர்கள் பலரும் அமைதியாக இருக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அ
இப்படி அறிவிப்பு செய்ய வேண்டும் என்றால், நிலவு சரியான நாள்களில் வரவேண்டும். 360 நாள்கள் பூர்த்தியாக வேண்டும்.
கடந்த நான்கு வருடங்களாக இதுகுறித்து ஆய்வு செய்தோம். 05.01.2014- ல் இருந்து 21.12.2017 வரையான மொத்தம் 1447 நாள்களில் முறையே 353, 356, 354, 355 நாள்களில் ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தொங்கல் மாதமாக மொத்தம் 29 நாள்களும் உள்ளன. இதனை மையப்படுத்தி நாங்கள் ‘பெருந்தச்சு நிழல் நாள்காட்டி’ என்று ஒரு நாட்காட்டியைத் தயாரித்துள்ளோம்.
வருடத்துக்கு 360 நாள்கள் வரவேண்டிய சூழலில், இப்படி குறைவாக வருவதற்கு ‘நிலவு தடுமாறுதல்’ தான் காரணம். ‘நிலவு தடுமாறுதல்’ என்பது அமாவாசை அன்று மறைந்த நிலவானது, மீண்டும் 15 நாள்களில் வராமல் முன்பே வந்துவிடுவது. கடந்த ஆண்டில் மட்டும் இப்படி ஐந்து நிலவு தடுமாறியிருக்கிறது. இதனால்தான் வருடத்துக்கு 360 நாள்களுக்குப் பதிலாக குறைவான நாள்கள் வந்திருக்கின்றன. பல ஆண்டுகளாக இப்படித்தான் வருகிறது. இப்படி வரக்கூடாது. இது அனைத்து உயிர்களுக்கும் நல்லதல்ல. இப்படி குறைவாக வருவதை நாம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் சனிக்கிழமை. நம் மரபில் சனிக்கிழமை என்ற ஒன்றே இல்லை. வெள்ளிக்கிழமைக்கு அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை வந்துவிடும். ஆனால், பல காரணங்களால் சனிக்கிழமை என்ற ஒருநாள் திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கின்றது" என்று சொன்ன மெய்யம்மன், தொடர்ந்து சொல்லும் செய்திகள், ஆச்சர்யத்தோடு பல்வேறு கேள்விகளையும் எழுப்புபவையாகவே உள்ளன.
''நிலவு சரியாக வராமல், முந்தி வந்தால்... ஆண்டின் நாள்கள் குறையும். இப்படிக் குறையும்போது, மழை சரியாகப் பொழியாது. இயற்கைச் சமநிலை சரியாக இருக்காது. இதுபோன்று பல கேடுகள் உருவாகும். மன்னர்கள் காலத்தில் ஏராளமான நுட்பங்களைப் பயன்படுத்தி பூமியைச் சரிசெய்து ஆண்டு, நாள்களை சரியாகக் கொண்டுவந்தார்கள். தமிழர்களின் அரசு சார்ந்த அத்தனை செயல்பாடுகளும் புத்தாண்டைச் சார்ந்துதான் இருந்துள்ளன. அதற்குப் பெயர்தான், ‘கொற்றம்‘. இதைச் சரியாக ஒழுங்குபடுத்திய மன்னன்தான் ‘கொற்றவேந்தன்’ என்று அழைக்கப்பட்டான். இதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளம் உள்ளன.
மன்னர்கள், ‘ஆண்டு ஒழுங்கு’ செய்வதற்காக தனிப்படையையே நடத்தியிருக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய படை அல்ல. கலைஞர்களால், நிபுணர்களால் ஆன படை. ‘உயிர்கள் எழுப்பக் கூடிய ஒலி அலைகளின் கட்டுப்பாட்டில்தான் நிலவு இயங்குகிறது. காதுக்குக் கேட்காத இந்த ஒலியின் மூலமாகத்தான் நிலவு ஒழுங்குபடுத்தப்படுகிறது’ என்று நவீன விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. ராஜராஜன் காலத்திலும் இந்த ‘நிலவு தடுமாற்றம்‘ ஏற்பட்டுள்ளது. அதனை ஒலி அலைகளின் மூலமாக ஒழுங்குபடுத்தியிருக்கிறான் ராஜராஜன்.
நாள்களை ஒழுங்குபடுத்துவதற்கு பத்துக்கும் மேற்பட்ட உத்திகள் உள்ளன. இதற்கு ‘துப்பு’ என்று பெயர். ஆனால், இந்த உத்திகளை தற்காலத்தில் பயன்படுத்த முடியாது. தஞ்சை பெரிய கோயிலே ராஜராஜன் பயன்படுத்திய துப்புதான். கோயிலின் அசைவின் மூலமாக பூமியை நகர்த்தி ஒழுங்கு செய்திருக்கிறான் ராஜராஜன்.
ஆக, தமிழ்ப்புத்தாண்டு என்பது சித்திரை 1, ஜனவரி மாதத்தில் தற்போதைய காலண்டர் படி பிறக்கும் தை 1 என்பதைத் தாண்டி, நிலவுப் பயணத்தின் அடிப்படையில் 360 நாள்கள் கடந்த நிலையில் வரும் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று மூன்றாவதாக ஒரு தமிழ்ப்புத்தாண்டு வந்துள்ளளது. மெய்ம்மன் சொல்வது அத்தனையையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை... இதென்னடா புதுக்குழப்பம் என்று கடந்து போகவும் முடியவில்லை. வானிலை மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள்தான் பதில் தரவேண்டும்.













