ஆப்பிள் பழத்துக்கு பதில் APPLE iPhone

SOCIAL SHARE
Pin It

இங்கிலாந்தில் நிக் ஜேம்ஸ் என்ற நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த சில ஆப்பிள்களுக்கு பதிலாக ஒரு புதிய ஆப்பிள் ஐபோனை இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் திக்குமுகாடிப்போனார்.

” நாங்கள் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தோம், ஆனால், ஒரு ஆப்பிள் ஐபோன் கிடைத்தது! என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது! ” என்று ஜேம்ஸ் கூறினார்.

டெஸ்கோ மொபைல் என்ற நிறுவனம் விளம்பர உத்தியாக “super substitute”  என்ற  விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு  ‘click and collect’  என்ற பரிசு திட்டத்தின் கீழ், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களது ஆர்டர்களுக்கு பதிலாக, வேறு விலை உயர்ந்த பொருளை பரிசாக அனுப்பி வைத்தது. 

"டெஸ்கோ மொபைல் ஏப்ரல் 18 வரை மொத்தம் 80 பொருட்களை ஒரு சில கடைகளில் கொடுத்துள்ளது. வெற்றியாளர்கள் குலுக்கல்  முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள், மேலும் ஒரு “super substitute”, அதற்கு பதிலாக வேறொரு விலை உயர்ந்த பொருளை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற நீங்கள் சில பொருட்களை வாங்க வேண்டும்,” என்று இந்த பரிசு திட்டம் குறித்து அந்த நிறூவனம் விளக்கியுள்ளது.

’சூப்பர்மார்க்கெட் மற்றும் மொபைல் உலகங்கள் ஒன்றிணைந்தால் எவ்வளவு ஆச்சரியமான விஷயங்கள் நிகழக்கூடும் என்பதைக் காண்பிப்பதற்காக இந்த பரிசு திட்டம் ஏற்படுத்தப்பட்டது” என்று டெஸ்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களில் சிலருக்கு ஏர்பாட்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி சாதனங்கள் ஆகியவற்றை பரிசாக பெற்றனர்.

ARUNACHALAM