அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்...

SOCIAL SHARE
Pin It

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றார்.

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை கொலை செய்வதாக மிரட்டியதாக அமெரிக்க மாகாணமான  புளோரிடாவில், 39 வயது செவிலியர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க உளவுத் துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது

பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 18 வரை அமெரிக்காவின் துணை அதிபரை கொலைசெய்வதாக பெல்ப்ஸ் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்தார் என்று புளோரிடாவின் அமெரிக்க தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள தனது கணவருக்கு பெல்ப்ஸ் வீடியோக்களை அனுப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் மீது வெறுப்பை உமிழும் வகையில் அவர் பேசுவதைக் காணலாம்.

ஆனால், கைது செய்யப்பட்ட பெல்ப்ஸ் இது பற்றி கூறுகையில், அவர் துணை அதிபராக பதிவியேற்றுக் கொண்ட போது தான் அவர் மீது கோபம் கொண்டதாகவும், இப்போது அவர் மீது கோபம் எதுவும் இல்லை எனவும் கூறினார்.

ARUNACHALAM