அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் ரத்தா?

SOCIAL SHARE
Pin It

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படபிடிப்பு நடைபெற்ற நிலையில், முன்னதாக படப்பிடிப்புக் குழுவினரில் எட்டு உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடல் நல காரணங்களை மேற்கோள் காட்டி, நெடுநாட்களாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க போவதாக கூறி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்போது அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், சமீபத்தில்  அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதாக செய்திகள் வெளியாகின. தற்போது, கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை தொடங்கி விட்ட நிலையில், ரஜினிகாந்தின் அண்ணாத்தே படம் மீண்டும் சிக்கலில் உள்ளது. 

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை போல் தோன்றிய நிலையில், ஹைதராபாத்தில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு படபிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, முக்கிய படங்களின் படபிடிப்புகள் அடுத்ததடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்பட ஷூட்டிங்கும் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பெரும்பாலும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் (EVP film city) படப்பிடிப்பு நடக்கும் என கூறப்பட்டது. அங்கு தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய  அளவில் படபிடிப்பிற்கான செட்டிங்குகளை அமைத்துள்ளனர், ஹைதராபாத் தவிர படப்பிடிப்பு கோவை மற்றும் பொள்ளாச்சியைச் சுற்றி நடக்கும் என கூறப்படுகிறது.

ARUNACHALAM