தமிழ் சினிமா நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ரைசா வில்சன் சமீபத்தில் ஒரு பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். தனது அழகுக்காகவும் மிருதுவான சருமத்திற்காகவும் புகழ் பெற்ற ரைசா வில்சன், ஒரு தோல் நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு தனது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனது நிலைமைக்கு காரணமான தோல் மருத்துவரை இன்ஸ்டாகிராமில் ரைசா (Raiza Wilson) வெளுத்து வாங்கினார். அந்த மருத்துவர் தனக்கு தேவையில்லாத தோல் சிகிச்சையை மெற்கொள்ளும்படி தன்னை கட்டாயப்படுத்தியதாக அவர் தனது பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
ரைசா தனது பதிவில், " ஒரு எளிய முக சிகிச்சைக்காக நேற்று @drbhairavisethil இடம் சென்றேன். எனக்குத் தேவையில்லாத ஒரு சிகிச்சையை மேற்கொள்ளும்படி அவர் என்னை கட்டாயப்படுத்தினார். என் முகத்தின் நிலைமை அதன் விளைவாகும். இன்று என்னைப் பார்க்கவோ அல்லது என்னிடம் பேசவோ அவர் மறுத்து விட்டார். அவர் ஊரில் இல்லை என அங்குள்ள ஊழியர்கள் கூறினார்கள்" என்று எழுதியுள்ளார்.
ரைசாவின் பதிவு வைரலானவுடன், தாங்களும் அதே மருத்துவரால், இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக பலர் அவருக்கு செய்தி அனுப்பியுள்ளனர். Behanced Luxe Dermatol என்ற கிளினிக்கை ரைசா தனது பதிவில் டேக் செய்துள்ளார். மக்களுக்கு அந்த நிறுவனம் குறித்த விழிப்புனர்வை அளிக்கவும், அவர்களை உஷார் படுத்தவும் அவர் இப்படி செய்துள்ளார். டாக்டர் பைரவி செந்தில் என்ற மருத்துவரின் பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.













