உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.56- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்புடன் 1.85- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.09- லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே, ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். அதேபோல், பிலிப்பைன்ஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் நேற்று 4 ஆயிரத்து 342 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் டோக்கியோ, ஒசலா, ஹியோகோ மாகாணங்களில் அவசர நிலை பிறப்பித்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













