இலங்கையில் 'பர்கா' அணிய தடை

SOCIAL SHARE
Pin It

முகம் மற்றும் உடலை மறைக்கும், 'பர்கா' போன்ற உடைகளுடன், பொது இடங்களில் நடமாட தடை விதிக்கும் வரைவு மசோதாவுக்கு, இலங்கை அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில், 2019ல் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில், 270 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உடலை மறைக்கும், 'பர்கா' உடை அணிந்து பொது இடங்களுக்கு வர, தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முகம் மற்றும் உடலை மறைக்கும், 'பர்கா' உள்ளிட்ட அனைத்து வகை உடைகளுடன் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கும் வரைவு மசோதாவுக்கு, இலங்கை அமைச்சரவைக் குழு,  ஒப்புதல் அளித்துள்ளது.

முகம் மற்றும் முழு உடலை மறைக்கும் உடைகளுடன் பொது இடங்களில் நடமாடுவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இதற்கு தடை விதிப்பது என, அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா, பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட பின், அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ARUNACHALAM