Axis வங்கி தனது பல சேவைகளுக்கான கட்டணத்தை மே 1ம் தேதி முதல் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Axis வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் வைத்திருக்கும் 10,000 ரூபாய்க்கு பதிலாக, குறைந்தபட்ச இருப்பு தொகையாக 15,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இதே பிரைம் மற்றும் லிபர்டி சேவிங்ஸ் கணக்கு வைத்திருப்போருக்கு மினிமம் பேலன்ஸ் என்பது 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் மினிமம் பேலன்ஸ் தொகை இல்லாவிடில் விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் என்பது 150 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிகபட்ச கட்டணம் என்பது 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
SMS அலர்ட்டுக்காக முன்னதாக மாதம் 5 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது ஒரு எஸ் எம் எஸிற்கு 25 பைசாவாகவும், இது அதிகபட்சம் 25 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1முதல் அலுக்கு வரும் எனவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இது ஒன் டைம் பாஸ்வேர்டுகளுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது.
ஏடிஎம்மில் ஒவ்வொரு மாதமும் கட்டணமில்லாமல் 4 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு எடுக்கும்போது ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இது முன்னதாக 5 ரூபாயாக இருந்தது.













