இங்கிலாந்தில் மாஸ்க், சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற விழா

SOCIAL SHARE
Pin It

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் சிக்கித் தவிக்கும் நிலையில், அடுத்தகட்டத்திற்கு உலகை எடுத்துச் செல்லும் முயற்சிகளும் பரிசோதிக்கப்படுகின்றன. 

இதன் அடிப்படையில் இங்கிலாந்து நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாக இரண்டு நாள் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் பொது இடங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் திறக்கலாம் என்பதற்கான ஒரு முன்முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இங்கிலாந்தின் லிவர்பூலில் இரவு விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு விருந்துக்கு வந்தனர். COVID-19 தொற்றுநோய் இங்கிலாந்தில் குறைந்து வருவதால் வெகுஜன பார்வையாளர்களின் நிகழ்வுகளை மறுதொடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த முன்முயற்சி பரிசோதனை (pilot scheme) மேற்கொள்ளப்பட்டது.

18 முதல் 20 வயதுடைய சுமார் 3,000 பார்வையாளர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள், முகக்கவசங்களை அணியாமல் warehouse ஒன்றில் ஒன்றுகூடி இசைக்கு ஏற்ப நடனமாடினார்கள்.

லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் (London’s Wembley stadium) ஞாயிற்றுக்கிழமை 8,000 பேர் கலந்து கொள்ளவிருக்கும் கால்பந்து கோப்பை இறுதிப் போட்டியும் இந்த பைலட் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

சமூக இடைவெளி மற்றும் காற்றோட்டம் தொடர்பான அணுகுமுறைகள்  கொரோனா வைரஸின் பரவலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவதானிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வுகளிலிருந்து கிடைக்கும் தகவல்களை பயன்படுத்துவார்கள்.

ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் லாக்டவுன் முழுமையாக நீக்கப்படலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தனது பெரும்பாலான ஐரோப்பியர்களை வேகமாக COVID-19 தடுப்பூசிகளை மக்களுக்கு கொடுத்துவருகிறது. இதுவரை இங்கிலாந்தில் 127,000 க்கும் மேற்பட்ட COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளது. இது உலகளவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை பட்டியலில் ஐந்தாவது இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM