இந்திய கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த நயாகரா நீர்வீழ்ச்சி!

SOCIAL SHARE
Pin It
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் கனடாவில் உள்ள உலகின் மிகப்பெரிய நயாகரா நீர்வீழ்ச்சி இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை காரணமாக தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கைகளும் சாதனை அளவை எட்டி வருகின்றன. கொரோனாவின் 2வது அலையைக் காட்டிலும் தற்போதைய பாதிப்பு 3 - 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே போல உயிரிழப்புகளும் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டு வருகின்றன. தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிப்படைவதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடவசதி இல்லாமலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமலும் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழியும் வீடியோக்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும் தங்களின் ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றன. தேவையான மருத்துவ உதவிகளையும், மருத்துவ தளவாடங்களையும் அனுப்பி வைத்து இந்தியா மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் நட்பு நாடான கனடாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளிரூட்டி கொரோனாவிற்கெதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கஃலிபா, இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது குறப்பிடத்தக்கது.

ARUNACHALAM