உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்து போராடி வருகிறது. இந்த தொற்றுநோயிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற, தடுப்பூசி போட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆனால் இதற்கிடையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியா மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
கோவிட் தடுப்பூசி பார்முலாவை பகிர்ந்து கொள்ளும் வகையில், அறிவுசார் சொத்துச் சட்டத்தை மாற்ற முடியுமா என்பது குறித்து பில் கேட்ஸிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பில் கேட்ஸ், 'வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி பார்முலாவை கொடுக்கக்கூடாது. அவர்கள் தடுப்பூசிக்காக காத்திருக்கட்டும் என கூறியுள்ளார்.
பில் கேட்ஸ், "உலகில் பல தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி பாதுகாப்பு குறித்து மிகவும் தீவிரமாக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும் தடுப்பு மருந்தின் சூத்திரத்தை கொடுக்கக்கூடாது” என கூறினார். அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு ஆலைக்கும். இந்தியாவில் உள்ள ஒரு ஆலைக்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் எங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்து, எங்கள் நிபுணத்துவத்துடன் தடுப்பூசி தயாரிக்கிறோம். தடுப்பூசி சூத்திரத்தை பகிர்ந்து கொள்வது சரியல்ல . தடுப்பூசி தயாரிக்கும் போது பல விஷயங்களையும் மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும் என்றார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று (மே 3, 2021) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது எனக் கூறலாம்.













