2 வயது மகனை 18 லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஜெஜியாங்கில் சுற்றுலா செல்வதற்காக தனது இரண்டு வயது மகனை விற்ற தந்தையின் போக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மனைவியுடனான சண்டையை தீர்க்கவும், குழந்தையை பராமரிக்கும் சுமையில் இருந்து விலகவும் முடிவு செய்த ஜியாஜியா (Jiajia) என்ற நபர் தனது முதல் மனைவிக்கு பிறந்த 2 வயது குழந்தையை விற்பனை செய்துள்ளார்.
குழந்தையின் பெற்றோருக்கு விவாகரத்து ஏற்பட்ட பின்னர், குழந்தை தந்தையின் பராமரிப்பில் இருந்தது. தாயின் பராமரிப்பில் மற்றொரு பெண் குழந்தை சென்றது. வேறொரு நகரத்தில் பணியில் இருந்ததால், குழந்தையை தனது சகோதரர் லின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் ஹுஷோ நகரில் விட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக, ஸீ தனது மகனை தனது சகோதரர் லினிடமிருந்து அழைத்துச் சென்றார், முன்னாள் மனைவி, மகனை பார்க்க விரும்புவதாகக் கூறி குழந்தையை வாங்கிச் சென்றார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகும், சிறுவன் வராததால், குடும்ப உறுப்பினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரிணையில் தான் திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாயின. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்ஷு என்ற நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு 158,000 யுவான் (18 லட்சம் ரூபாய்) தொகைக்கு மகனை அப்பாவே விற்றிருக்கும் அவலம் தெரியவந்தது. அந்த பணத்தைக் கொண்டு தனது புதிய மனைவியை அழைத்துக் கொண்டு உல்லாசமாக ஊர் சுற்றியிருக்கிறார்.













