கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில மருந்துகள் மற்றும் புதிய தடுப்பூசிகளைக் கொண்டு நோய் பரவல் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மேலும் அதிர்ச்சியான தகவலை மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட பருவத்தினருக்கு மாரடைப்பு, பக்கவாதம், மூச்சுக் குறைபாடு, இதய செயலிழப்பு, இதய வலி ஆகியவை ஏற்படுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ரத்தம் உறைவு, ரத்தத்தில் அடர்த்தி அதிகம் ஆகியவை ஏற்படுவதாகவும், இதனால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நுரையீரலில் ஆக்சிஜன் உள்ளிழுக்கும் தன்மை தடைபடுவதாக புனே மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தாலும், இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அது வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அறிகுறிகளை கவனிக்க தவறினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.













