குப்பைத் தொட்டியில் உணவைத் தேடி அலையும் இளைஞர்

SOCIAL SHARE
Pin It

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வேலையிழந்து, தங்க இடமும் இன்றி, குப்பை தொட்டிகளில் உணவைத் தேடி, கூலித் தொழிலாளி ஒருவர், பெங்களூரில் அலைவது, பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பவரல் காரணமாக, மாநிலத்தில், 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பலர் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். ஆலூர் மாவட்டத்தில், விவசாய பண்ணை ஒன்றில், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் ராஜு. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, அவருக்கு வேலையில்லை; சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல், தங்குவதற்கு இடமும் இன்றி பாதிக்கப்பட்டார். .

பணம் இல்லாததால், பட்டினி கிடந்த ராஜு, குப்பை தொட்டிகளில் உணவு இருக்குமா என, தேடி அலைந்தார். இதை பார்த்த சதீஷ் என்பவர், அவருக்கு உணவு வழங்கினார். இதன்பின், ராஜு தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். ஊரடங்கு முடிந்தபின், ராஜுவை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக, சதீஷ் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், ஊரடங்கு காரணமாக வேலையின்றி, தங்க இடமும் இன்றி, பஸ், ரயில் நிலையங்கள், சாலையோரங்களில் பலர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தினமும் ஒரு வேளை உணவு வழங்கி வருகின்றனர்.

ARUNACHALAM