உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்துள்ள கொரோனா எவரெஸ்ட் சிகரத்தையும் சென்றடைந்தது.
நேபாள நாட்டில் இருந்து மலை ஏறுபவர்கள் மூலம், சீன தரப்பில் இருந்து மலை ஏறுபவர்களுக்கு, தொற்று பரவலாம் எனவும், அதனால், தொற்று பரவலை தடுக்க, எவரெஸ்ட் மலையில், எல்லைகளை பிரித்து காண்பிக்கும் வகையிலான கோடு வரையப்படும் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதை அடுத்து, உலகெங்கிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட, நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து என கிட்டத்தட்ட உலக இயக்கம் ஸ்தபித்தது எனலாம்.
அந்நிலையில், நேபாள அரசும், எவரெஸ்ட் மலைச்சிகரம் ஏற, அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுலா துறையை சார்ந்திருந்த பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.
நேபாளத்திலிருந்து மலையை ஏறும் ஏறுபவர்களிடையே பல கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.













