கேரளாவில் யானை ஒன்று மனிதர்களுடன் கிரிக்கெட் விளையாட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. கண்ணுபிரேம் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் யானை ஒன்று தன் தும்பிக்கையில் தென்னை மட்டையால் ஆன ”பேட்” வைத்திருக்கிறது.
அங்குள்ள மனிதர்கள் அந்த யானைக்கு பந்துவீச யானை சிக்ஸரும் ஃபோருமாக அடித்து நொறுக்கியது. இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
"இன்சைட் அவுட் கவரஸ். தும்பிக்கைக்கும் கண்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அற்புதம். அபார ஆட்டம் #Gannu #cricket #incredible" என்று சேவாக் இந்த வீடியோவில் எழுதியுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து யானை பேட்டிங் செய்ததைப் பாராட்டினார்.
அபாரமாக பேட்டிங் செய்யும் யானைக்கு இங்கிலாந்தின் பாஸ்போர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் என கிரிக்கெட் வீர்ர வாகன் ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவில் உள்ள இந்த யானைக்கு ஆங்கில பாஸ்போர்ட் இருந்தால் பேட்டிங் லைன் அப் வலுப்பெறும் என கூறி கிண்டல் செய்துள்ளார்.
"நிச்சயமாக இந்த யானைக்கு ஆங்கில பாஸ்போர்ட் உள்ளது !!" என்று வாகன் ட்வீட் செய்துள்ளார்.













