அரச குடும்பம் : மிருக காட்சி சாலை போன்றது : ஹாரி

SOCIAL SHARE
Pin It

அரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் வாழ்வதற்கு சமம் என்று இளவரசர் ஹாரி தெரிவித்தார்.

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய ஹாரி, ‛ அரச குடும்பத்தில் வாழ்ந்ததை பெரிய சுமையாக கருதினேன், எனக்கு 20 வயது ஆகும் போதே அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். என் அம்மா டயனாவின் நிலை தன் மனைவிக்கும் குழந்தைக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அரச குடும்பத்திலிருந்து வெளியேறி விட்டேன்' இவ்வாறு ஹாரி கூறினார்.

"என்னைப் பொறுத்தவரை, நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவி என் பக்கத்தில் அமர்ந்திருக்க, மற்றவர்களுடன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று ஹாரி கூறுகிறார்.

தங்களுக்கு ஆர்ச்சி மகனாக பிறந்தபோது அவரை இளவசர் ஆக அறிவிக்கவில்லை. அந்த தகவல் கிரகித்துக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. காரணம் அது பட்டம் பற்றியது மட்டுமல்ல. அவருக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதுதான்.

இது எல்லாவற்றையும் எனக்கு அதுவரை கிடைத்திராத தாய் என்ற பட்டம் இருந்தது மிக முக்கியமானது. எனது மகன் பாதுகாப்பாக இல்லாதது மற்றும் இந்த குடும்பத்தின் முதல் வாரிசு, மற்ற பேரப்பிள்ளைகளைப் போல பட்டத்துடன் அழைக்கப்படாதது வருத்தம்தான். நான் கர்ப்பமாக இருந்தபோதே எனது பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டமோ இளவரசி பட்டமோ வழங்கப்படாமல் இருக்க விதிகள் மாற்றப்பட்டன. அப்படி பறிப்பது அவர்களின் உரிமை கிடையாது. ஏன் எப்படி செய்ய வேண்டும்? என ஹாரியின் மனைவி மேகன் தெரிவித்தார். 

ARUNACHALAM