வருமான வரியை தாக்கல் செய்ய புதிய இணையதளம்

SOCIAL SHARE
Pin It

வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகியுள்ளது. புதிய தளம் ஜூன் மாதம்  7ம் தேதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வருமான வரித் துறையில்  மின்னணு முறையில் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் இருந்தது.

மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வெளியீட்டின்படி, புதிய இனையதளமான incometax.gov.in  ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. வரி செலுத்துவோருக்கு இனி வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும்.

வரி செலுத்துவோர் உடனடி தகவல்களை பெறும் வண்ணம் நிலுவையில் உள்ள நடவடிக்கை உட்பட அனைத்து வகையான பிற தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம் என்று சிபிடிடி மேலும் கூறியுள்ளது. எனினும், வரி வருவாய் தாக்கல் அம்சம் ஜூன் 18 அன்று தான் செயல்பாட்டிற்கு வரும்.

வரி செலுத்துவோர் புதிய இணையதளத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் புதிய மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சிபிடிடி தெரிவித்துள்ளது. "புதிய இணையதளம் குறித்து புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகலாம், எனவே புதிய போர்ட்டல் தொடங்கப்பட்ட பின்னர் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக சிறிது பொறுமை காக்க வேண்டும் என சிபிடிடி வலியுறுத்தியுள்ளது.  

ஐ.டி.ஆர் 1 மற்றும் 4 (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) மற்றும் ஐ.டி.ஆர் 2 (ஆஃப்லைன்) வரி வருவாய் படிவங்களை பொறுத்தவரை, புதிய போர்டலில்  வருமான வரி தாக்கல் தொடர்பான மென்பொருள் இலவசமாக கிடைக்கும். ஐடிஆர் 3, 5, 6, 7  படிவங்களை பொறுத்தவரை, வரி தாக்கல் தொடர்பான வசதிகள் விரைவில் கிடைக்கும் என சிபிடிடி மேலும் வலியுறுத்தியது.

ARUNACHALAM