மர்மமான மெக்ஸிகோ கிராமம்; மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எவருக்கும் பார்வை இல்லை

SOCIAL SHARE
Pin It

மெக்ஸிகோவில் அமைந்துள்ள டில்டெபெக் கிராமம் பார்வையற்றோரின் கிராமம் (Village Of Blind People) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் மனிதர்கள் மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் பார்வை இல்லை. இது உலகின் மிக மர்மமான கிராமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஜாபோடெக் நாகரீகத்தை சேர்ந்த (Zapotec Civilization) பழங்குடியின மக்கள் கிராமத்தில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்ஸிகோவில் உள்ள டில்டெபெக் கிராமத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போது, ​​கண் பார்வை பாதிப்பு ஏதும் இன்றி, நன்றாகத் தான் பிறக்கிறது. ஆனால் பிறந்த சில நாட்களுக்குப் பிறகு, அதன் கண்பார்வை போய்விடும்.  அங்கு வாழும் மற்றவர்களைப் போல அக்குழந்தைக்கும் பார்வை பறிபோய் விடுகிறது.

கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு மரத்தை தங்கள் குருட்டுத்தன்மைக்கு காரணம் என்று கருதுகின்றனர். லாவ்ஸுவேலா என்ற அந்த மர்மமான சபிக்கப்பட்ட மரத்தைப் பார்த்த பிறகு, மனிதர்கள் முதல் விலங்குகள் மற்றும் பறவைகள் வரை அனைவரும் இங்கு குருடர்களாகி விடுகிறார்கள் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். இருப்பினும், விஞ்ஞானிகள் இந்த வாதத்தை ஏற்கவில்லை. மக்களின் குருட்டுத்தன்மைக்கு பின்னால் எந்த மரமும் காரணமும் இல்லை என்று அவர் கூறுகிறார்கள்.  ஆனால் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையுள்ள பறக்கும் பூச்சி ஒன்றினால் இவர்கள் பார்வை பறிபோவதற்கு (Poisonous Flying Insect) காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒரு சிறப்பு வகையான விஷ ஈ (Poisonous Flying Insect)கடித்ததால் மக்களின் கண்பார்வை பறிபோகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கிராம மக்கள் அனைவரும் குடிசைகளில் வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 70 குடிசைகள் உள்ளன. அவர்களில் சுமார் 300 பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள். இந்த குடிசைகளுக்கு ஜன்னல்களும் இல்லை. சிலரின் கண்பார்வை திரும்ப கூடும் எனவும் சிலர் நம்புகின்றனர்.

ARUNACHALAM