Gucci என்பது ஒரு ஆடம்பர ஃபேஷன் பிராண்டாகும். Gucci நிறுவனம், எம்பிராய்டரி செய்த ஒரு குர்தாவை 2.5 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தியை ஒரு ட்விட்டர் பயனர் பகிர்ந்தவுடன், இது வைரல் ஆகி வருகிறது. இணைய வாசிகள் இதற்கு பல்வேறு விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
Gucci வலைத்தளத்திலிருந்த குர்தாவின் புகைப்படத்தின் ஸ்க்ரின்ஷாட்டை பதிவு செய்த இந்த குறிப்பிட்ட ட்விட்டர் பயனர், இதன் தலைப்பில், "Gucci ஒரு இந்திய குர்தாவை 2.5 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது. இதே குர்தாவை என்னால் இங்கு 500 ரூபாயில் வாங்க முடியும்" என எழுதியிருக்கிறார்.
Gucci வலைத்தளத்தில் இந்த குர்தா, "மலர் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆர்கானிக் லினன் கஃப்தான் (Floral embroidery organic linen kaftan)" என தெரிவித்துள்ளது. இதன் விலை 3,500 அமெரிக்க டாலராக, அதாவது 2,55,878 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஃப்-வைட் லினென் குர்தாவான இதில் பூ வடிவ எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. கை பகுதியிலும் சில வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஃபாஷன் பிராண்ட் இத்தாலியில் உள்ள ஃப்ளாரன்ஸ் நகரில் உள்ளது.
"இதுக்கு 150 ரூபாய்க்கு மேல ஒரு ரூபா கூட கொடுக்க முடியாது" என்று பயனர் வேடிக்கையாக கூறியுள்ளார். மற்றொருவர், "சரோஜினி நகர் மார்ட்கெட்டில் 250 ரூபாய்க்கு கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.













