சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இன்ஸ்டாகிராமில் செய்த ஒரு பதிவு பெரும் புயலை கிளப்பியது. சமூக ஊடகத்தில் செய்த பதிவுக்காக, பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். காலிஸ்தானிய பயங்கரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேவிற்கு ‘அஞ்சலி’ செலுத்தி, அவரை புகழ்ந்து போடப்பட்ட பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதை அடுத்து ட்விட்டரில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்
ஹர்பஜன், திங்களன்று, இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது பதிவு கவனிக்காமல் அவசரமாக பதிவு செய்யப்பட்டதாகவும், அது தனக்கு வாட்ஸ் அப்பில் கிடைத்த தகவல் அது என்றும் தெளிவுபடுத்தினார். இந்தியாவுக்கு எதிரான எதையும் தான் ஆதரிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
"ஒரு வாட்ஸ்அப் தகவல் வந்தது. அதனை முழுமையாக கவனிக்காமல், உள்ளடக்கம் எதைக் குறிக்கிறது என்பதை உணராமல் அவசரமாக பதிவிட்டு விட்டேன். நான் செய்தது தவறு தான், எந்த நிலையிலும், நான் பகிர்ந்த அந்த கருத்துக்களுக்கு எனக்கு எந்த விதத்திலும் உடன் பாடு இல்லை. நான் ஒரு போது, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை ஆதரிக்க மாட்டேன், ”என்று ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார்.
“நான் ஒரு சீக்கியர், நான் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் சீக்கியன். எதிராக அல்ல. நான் 20 ஆண்டுகளாக இந்த நாட்டிற்காக எனது இரத்தத்தையும் வியர்வையையும் கொடுத்துள்ளேன், இந்தியாவுக்கு எதிரான எதையும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன், ”என்று அவர் மேலும் கூறினார்.













