ஒரு நாளில் அல்லது உங்கள் வாழ் நாளில் எத்தனை சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? சொற்களின் ஆற்றலைப் பற்றியும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி பற்றியும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்
ஒருவரது இயல்பிற்கு ஏற்ப அவரது பேச்சு இருக்கும். சிலர் குறைவாகப் பேசுவார்கள், சிலர் அதிகம் பேச விரும்புவார்கள். LinkedIn பயிற்றுவிப்பாளர் ஜெஃப் அன்செல் நடத்திய ஆய்வில், , ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 7000 சொற்களைப் பேசுகிறார் என கூறப்பட்டுள்ளது. பலர் இதை விட அதிகமான சொற்களைப் பேசுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சர்யமான தகவலாக இருக்கிறது.
சராசரி மதிப்பீட்டை எடுத்துக் கொண்டால், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதிலும் 860,341,500 சொற்களைப் பேசுகிறார், அதாவது சுமார் 86 கோடி வார்த்தைகள். எனவே உங்கள் வாழ்க்கை முழுவதிலும், 86 கோடி வார்த்தைகளை பேச உங்கள் சக்தியை எந்த அளவிற்கு செலவிழிக்க வேண்டும். பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஒளிபரப்பாளருமான கில்ஸ் பிராண்ட்ரெத் தனது புத்தகமான The Joy of Lex: How to Have Fun with 860,341,500 Words என்ற புத்தகத்தில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அகராதியில் இவ்வளவு சொற்கள் இருக்கிறதா என்ன என உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படலாம்!
மனிதன் பேசும் வார்த்தைகளை மற்ற விஷயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு சாதாரண மனிதனும் தனது வாழ்க்கையில் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 20 வால்யூமை 14.5 முறை வாசிப்பதற்கு ஒப்பானது என கூறப்படுகிறது. மனித சொற்களை என்சைக்ளோபீடியாவின் 32 வால்யூம் புத்தகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் பயன்படுத்தும் வார்த்தைகளிலிருந்து 19.5 புத்தகங்களை எழுதலாம். பைபிளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் கிங் கேம்ஸ் பைபிளில் உள்ள சொற்களை விட 1110 மடங்கு வார்த்தைகளைப் பேசுகிறார்.













