தொற்றுநோய் நெருக்கடியினால் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானம் இழந்த, மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி (IDFC FIRST Bank) ‘கார்கர் ரேஷன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு வங்கியின் ஊழியர்கள் நிதியளிக்கின்றனர். இது உன்னத முன்முயற்சியைத் தவிர, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி தனது ஊழியர்களுக்காக வேறு சில முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
‘கார்கர் ரேஷன்’ திட்டத்தின் கீழ், ஐ.டி.எஃப்.சி வங்கியின் ஊழியர்கள் தொற்றுநோய் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட 50,000 ரூபாய்க்கு குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான நிதிக்காக தங்கள் தனிப்பட்ட வருமானத்திலிருந்து, வங்கி ஊழியர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
வாடிக்கையாளர் கோவிட் பராமரிப்பு நிதியைப் பொறுத்தவரை, ஐ.டி.எஃப்.சி (IDFC FIRST Bank) வங்கி ஊழியர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை, தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக நன்கொடையாக அளித்துள்ளனர்.
சாராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 10 கிலோ அரிசி / கோதுமை மாவு, 2 கிலோ பயறு, 1 கிலோ சர்க்கரை மற்றும் உப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், 5 பாக்கெட் வகைப்படுத்தப்பட்ட மசாலா பொருட்கள், தேநீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள், கொரோனா வைரஸ் நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன.
ரேஷன் பொருட்கள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று வழங்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள வங்கி ஊழியர்களால் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் நகர்ப்புற நகரங்களில் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ .1800 மதிப்புள்ள முன் கட்டண அட்டைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மளிகை சாமான்களை வாங்க அட்டையைப் பயன்படுத்தலாம்.













