பொறியியல் படிப்புகள்

SOCIAL SHARE
Pin It

பொறியியல் படிப்புகள் என்றாலே, சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறைகள் மட்டும் தான் என நாம் அறிந்து வைத்திருப்போம். அதனால் தான் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மேற்கண்ட துறைகளில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பொறியியல் துறைகளின் எண்ணிக்கை ஏராளாம். 



வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் பொறியியல் துறைகள்:
 
ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்
விமானங்கள் சார்ந்த தொழில்நுட்ப பொறியியல் படிப்பு. பொதுத்துறை, தனியார் துறை, பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், விமான நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெறலாம்.
பன்னாட்டளவில் தேவை அதிகமுள்ள துறை.  

எலக்ரிக்கல் இன்ஜினியரிங்

அனைத்து துறைகளிலும் மின்சாரம் என்பது இன்றியமையாதது. இந்தப் பிரிவு பொறியியல் படித்தவர்களுக்கு பொதுத்துறை, தனியார் மின் சாதன உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை, ஆட்டோமொபைல் உற்பத்தித் துறை என, அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் எப்போதும் இருக்கும். குறிப்பாக வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.

 அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்

விவசாய உற்பத்தி சார்ந்த தீர்வுகளை தொழில்நுட்பங்களைக் கொண்டு கையாளும் துறை. நம் நாட்டில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், தனியார் மற்றும் பொதுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பயோ மெடிக்கல்

பொறியியலும் மருத்துவமும் கலந்த ஒரு துறை. மருத்துவக் கருவிகள் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் அதற்கான மென்பொருள் உருவாக்கம் ஆகியவை இந்தத் துறையின் முக்கியப் பணிகள். செயற்கை  மூட்டுக்கள் உள்பட செயற்கை உடலுறுப்புக்கள் வடிவமைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கும் துறை. மருத்துவர்களைக் காட்டிலும் அதிக மதிப்புடன் வளர்ச்சி காணலாம்.   

ஆர்க்கிடெக்ச்சர் இன்ஜினியரிங்

கட்டுமான வடிவமைப்பு குறித்த பொறியியல் படிப்பு. பி.ஆர்க் என்ற பட்டம் பெறலாம். ஏற்றத்தாழ்வின்றி எப்போதும் நிலையான பாதையில் செல்லும் துறை என்பதால், வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி தொழில்வாய்ப்புகளும் அதிகம்.

ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்வாகனங்கள் இல்லாத உலகே இல்லை. ஆதலால் இந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு எப்போதும் வேலைவாய்ப்புகள் இருக்கும். புத்தகப் புழுவாக இருக்காமல், சிக்கல்களை புதிய யுத்திகளைக் கொண்டு சரிசெய்யும் ஆற்றல் இருந்தால், உலகத்தின் எந்த மூலைக்கும் சென்று வேலைவாய்ப்புகளைப் பெற்று முன்னேறலாம். 

மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

மெக்கானிக்கலும், எலெக்ட்ரானிக்ஸ் துறையும் இணைந்த புதிய துறை தான், மெக்கட்ரானிக்ஸ். எலெக்ரானிக்ஸ் பொறியியலில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை இந்தத் துறை ஏற்படுத்தும். எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறை, ஆட்டோமொபைல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த பொறியியல் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. 

இவை தவிர, பின்வரும் பொறியியல் படிப்புகளுக்கும் தற்போது நல்ல வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.
 டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்
 ஓசோன் அண்ட மெரையின் இன்ஜினியரிங்
 மைனிங் இன்ஜினியரிங்
 எலக்டிரிகல் அண்டு எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
 எலகட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிகேஸன் இன்ஜினியரிங்
 புட் டெக்னாலஜி
பெட்ரோலியம் அண்டு ஆஃப் சோர் இன்ஜினியரிங்
 கம்பியூட்டர் சயின்ஸ்
மெட்டிரியல் இன்ஜினியரிங்
 பிஇ பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்
 பிஇ ஹானஸட் மெனுஃபேக்ஸ்ரிங் இன்ஜினியரிங்
 பிஇ ஹானஸ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

இவை தவிர, பொறியியல் துறைகளுக்கான பட்டயப் படிப்புகளும் ஏராளமாக உள்ளன. பத்தாம்  வகுப்பு முடித்ததும் பாலிடெக்னிக் சேர்ந்து பட்டயப் படிப்புகளை மேற்கொள்ளலாம். அதன் பின் அதே துறையில் உள்ள மேற்படிப்புகளை வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம்.

இத்தனை துறைகளுக்குமான வேலை வாய்ப்புகள் உலகம் முழுவதும் எப்போதும் இருக்கும். குறிப்பாக தற்போது மெட்ரோ ரயில் புராஜெக்ட் மற்றும் ஸ்மார்ட்சிட்டி போன்ற புதிய திட்டங்களால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியாளர்களுக்கு இனி வரும் ஆண்டுகளில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால், பல்கிப் பெருகியுள்ள பொறியியல் கல்லூரிகள் தங்களுக்குள் நடக்கும் போட்டியில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க கட்டாயப்படுத்தி, அவர்களை புத்தகப் புழுக்களாக மாற்றி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும், மாணவர்களும் கடிவாளம் கட்டிய குதிரைகளாக, பாடங்களில் மட்டுமே புத்தகப் புழுக்களாக கவனம் செலுத்துவதால் தான், கேம்பஸ் நேர்காணல்களில் தேர்வாகி வேலைக்குச் சென்றாலும், பெரும் வளர்ச்சியை எட்டுவதில்லை. அதனால் தங்களது பாடத்திட்டம் தாண்டி, தாங்கள் சார்ந்த பொறியியல் துறையின் வளர்சி, தொழில்நுட்பங்களை கற்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களும் தற்போது பொறியியல் துறைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைக் காட்டிலும், துறை சார்ந்த அறிவு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.

 கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள், பட்டிலிடப்பட்டுள்ள கல்லூரிகளின் பயிற்றுவிக்கும் தரம், தேர்வு செய்யப்போகும் பொறியியல் துறையில் தனக்கிருக்கும் ஆர்வம் ஆகியவற்றை நன்கு பகுத்தறிந்து அதன் பின் அனைத்தையும் இறுதி செய்ய வேண்டும்.

ARUNACHALAM