மருத்துவம், பொறியியல் மற்றும் இவை தொடர்பான தொழில்முறை படிப்புகளை முடித்தால் தான் சிறப்பான எதிர்காலம் என்பது தவறான கருத்து. மேலாண்மை, வணிகவியல் உள்பட பல்வேறு பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகள் மூலம் மிகச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்.
புள்ளியியல்:
அரசு, தனியார் துறை என அனைத்து இடங்களிலும் தற்போது புள்ளியியல் துறைக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன. நிறுவனங்களில் சந்தை ஆய்வுகளை மேற்கொள்வது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, டேட்டா அறிவியல், நிறுவனங்களின் வளர்ச்சி கண்காணிப்பு என முக்கியமான செயலாக்கங்களுக்கு புள்ளியியல் படித்தவர்கள் தேவைப்படுகின்றனர். கணிதத்தில் ஆர்வமும் நல்ல மதிப்பெண்களும் இருந்தால், இந்தத் துறை உங்களுக்கு ஏற்றது. இளங்கலை, முதுகலை, ஆய்வுப் படிப்புகள், பட்டயம் என பல்வேறு புள்ளியியல் படிப்புகள் உள்ளன.
கூடவே பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றிருந்தால், விற்பனை துறை, பொருளாதார திட்டமிடல் துறை, வர்த்தக துறை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். சில ஆண்டுகள் அனுபவம் பெற்று விட்டால் போதும், கார்ப்பரேட் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் நல்ல பதவிகளில் லட்சங்களில் சம்பளம் பெறலாம்.
ஆங்கிலம் :
மொழிபெயற்பாளர் (Translator), கல்வி துறை (Teaching) போன்ற துறைகளில் அதிக வேலை வாய்புள்ள படிப்பு.
வணிகவியல் :
றியாளர், மருத்துவருக்கு இணையான துறையாக பார்க்கப்படுவது, வணிகவியல் துறை. பிகாம் படித்து, கணக்குப் பதிவியலில் மேற்படிப்புகளை முடித்தால் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்க முடியும். இப்படிப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டாலும் நல்ல சம்பளத்துடன் கூடிய அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
மேலாண்மை பட்டப் படிப்புகள்:
பிபிஏ, பிபிஎம் ஆகிய இளங்கலை பட்டம் பெற்று, எம்பிஏ அல்லது மேலாண்மை பட்ட மேற்படிப்புகள் முடித்தால் போதும். பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவளம், நிதி, நிர்வாகம் உள்பட பல்வேறு துறைகளில் நிரந்தர வேலைவாய்ப்புடன் உறுதியான வளர்ச்சியையும் பெறலாம்.
தகவல் தொழில் நுட்ப துறை:
மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் துறை இதுவாகத் தான் இருக்கும். கடந்தகாலங்களில் இந்த துறைக்கு இருந்த அதீத கவர்ச்சியும் கவர்ச்சியும் ஒரு கட்டத்தில் சரிந்ததால், மாணவர்களின் பார்வையில் இருந்து சற்று மங்கியிருந்தது. ஆனாலும், பன்னாட்டளவில் வேலைவாய்ப்புகளையும், வளர்ச்சியையும் அள்ளித் தரும் துறை இது. பிடெக் பொறியியியல் தவிர, பி.சி.ஏ, பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், உள்பட இளங்கலை படிப்புகளை முடித்து, கணிப்பொறியல் தொடர்பான முதுகலைப் பட்டம் அல்லது அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் புரோகிராமிங் மொழிகளுக்கான பட்டயப் படிப்புகளை படித்தால், நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்புகளை பெறலாம். தற்போதுள்ளா சூழலில் கேமிங், மொபைல் அப்ளிகேஷன்கள், டிஜிட்டல் வர்த்தகத் துறைகள் அதிகளவில் முன்னேறி வருவதால், இவை தொடர்பான தொழில்நுட்பங்களைக் கற்றால் நல்ல எதிர்காலம் உண்டு.
மொழி அறிவு அவசியம்
மேற்கண்ட துறைகளில் சிறப்பாக மிளிர வேண்டுமென்றால், தொழில்நுட்பத்தில் ஆற்றல் இருந்தால் மட்டும் போதாது…ஆங்கில மொழி அறிவு அவசியம் இருத்தல் வேண்டும். குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் சிறப்பாக வேலை செய்வது மட்டுமின்றி, வேலை செய்யும் விதங்களையும், புது யுத்திகளையும் நிர்வாகத்திற்கு தெள்ளத் தெளிவாக விளக்க வேண்டும். குறிப்பாக, பணி குறித்த விபரங்களையும், விளக்கங்களையும் இமெயில் மூலம் அனுப்ப வேண்டும். நீங்கள் இமெயில் அனுப்பும் முறை, அதில் பயன்படுத்தும் அலுவல் மொழியின் ஆளுமை இவற்றை வைத்து தான், நிறுவங்களில் அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியமாகும். இதற்கு, பொது மொழியான ஆங்கிலம் அவசியம்.
இதற்காக தனியாக ஆங்கில வகுப்புகள், பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது தான். ஆனால் அதைக்காட்டிலும், தினமும் காலை ஆங்கில செய்தித்தாள்கள் வாசிப்பது, நண்பர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுவது, அலுவல் இமெயில்களை அனுப்புவது குறித்த ஆன்லைன் கையேடுகளை பதிவிறக்கி பயிற்சி பெறுவது அவசியம்.













